search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயில் எரிந்து நாசம்"

    • வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலையில் உள்ள செம்மடைபாளையம் அருகே உள்ளது.
    • தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவராக இருப்பவர் வடிவேல் (50). இவரது தேங்காய் குடோன் கபிலர்மலை-ஜேடர்பா ளையம் செல்லும் சாலை யில் உள்ள செம்மடை பாளையம் அருகே உள்ளது.

    இதில் சுமார் ரூ. 8 லட்சம் தேங்காய்கள் குவிக்கப்பட்டு இருந்தது. தேங்காய் விலை குறைவாக இருப்பதால் தேங்காயை உரிக்காமல் குவிக்கப்பட்டு மேல் தேங்காய் மஞ்சு களை(நார்) போட்டு தேங்காய்களை மூடி வைத்தி ருந்தனர். அதற்கு மேல் தேங்காய்கள் உலராமல் இருக்க தேங்காய் மட்டை களை போட்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் தேங்காய்கள் குவிக்கப்பட்டருந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் சென்று கொண்டி ருந்தபோது. காற்றின் காரணமாக மின்சார கம்பி களில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது. இதனால் தேங்காய் மட்டை மற்றும் தேங்காய் மஞ்சு களில்திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தேங்காய் குடோனில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் .இருப்பினும் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து வடிவேல் நாமக்கல் தீயணைப்பு துறை யினருக்கும், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு துறையினருக்கும் , ஜேடர்பாளையத்தில் உள்ள தீயணைப்பு வாகனத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் நாமக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்டஅலுவலர் வெங்கடாசலம் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள், வேலாயுதம்பா ளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள், ஜேடர்பாளை யத்தில் உள்ள தீயணைப்பு வாகனம் ஆகிய மூன்று வாகனங்களும் விரைந்து சென்று தேங்காய்களில் வேகமாக எரிந்து கொண்டி ருந்த தீயை சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுதனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ.75 லட்சம் மதிப்பிலான சுமார் 8 லட்சம் தேங்காய்கள் தீயில் எரிந்து நாசமாயின.

    • இரவு வைத்த தீ நேற்று மதியம் வரை இருந்த நிலையில் வீட்டின் அருகே இருந்த வைக்கோல் போர் மீது தீப்பொறி விழுந்துள்ளது.
    • தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவருக்கு 5 பசு மாடுகளும், 5 ஆடுகள் என கால்நடைகள் வைத்து பராமரித்து வந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் சுமார் 60 ஆயிரம் மதிப்பில் வாங்கி தனது வீட்டின் அருகே அடுக்கி வைத்துள்ளார்.

    இந்நிலையில் இரசு நேரங்களில் கொசு தொல்லை அதிகம் என்பதால் வீட்டின் அருகே தீ வைத்து புகை ஏற்படுத்தி கால்நடைகளை பராமரித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று வெப்பம் அதிகமாக வாட்டி வதைத்து வந்தது. இரவு வைத்த தீ நேற்று மதியம் வரை இருந்த நிலையில் வீட்டின் அருகே இருந்த வைக்கோல் போர் மீது தீப்பொறி விழுந்துள்ளது.

    இதில் வைக்கோல் தீயில் எரிய தொடங்கியது. அருகே இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அருகே இருந்தவர்களின் உதவியோடு வீட்டிற்குள் இருந்த தண்ணீரை எடுத்து வந்து அணைக்க முயன்றனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் 60 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமடைந்தது.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வெளியே யாரும் வைக்க வேண்டாம் என தீயணைப்பு துறையினர் வேண்டுகோள் விடுத்தள்ளனர்.

    • கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதற்காக வைக்கோல் போர் அவரது வீட்டின் அருகே வைத்திருந்தார்.
    • இந்நிலையில் நேற்று வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே நல்ல குமாரன்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குப்பாயி (வயது 70). கூலித் தொழிலாளி. இவர் கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதற்காக வைக்கோல் போர் அவரது வீட்டின் அருகே வைத்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தி, தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பி–னும் ரூ.50 ஆயிரம் மதிப்பி–லான வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமாயின.

    ×