search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவேந்தல் கூட்டம்"

    • உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
    • நினைவிடத்தில் தினமும் பல்வேறு திரை பிரபலங்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த 28-ந்தேதி காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    அவரது நினைவிடத்தில் தினமும் பல்வேறு திரை பிரபலங்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    சிவக்குமார், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் விஜயகாந்த் வீட்டுக்கும் நேரில் சென்று அவரது மனைவி பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

    தன்புகழையும் திறனையும் சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த எங்கள் சங்கத்தின் பெருந்தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது.

    வருகிற 19-ந்தேதி மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் நினைவேந்தல் கூட்டம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கர் சமூக நீதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கௌசல்யா தலைமை வகித்தார்.
    • சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த கொடூர சம்பவத்தில் காதல் திருமணம் செய்த சங்கர் சாதீய வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் சங்கர் நினைவேந்தல் கூட்டம் குமரலிங்கபுரத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சங்கர் சமூக நீதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கௌசல்யா தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கி.கனகராஜ்,தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் இரா.விக்ரமன்,தமிழ் தேசிய விடுதலை இயக்க வழக்கறிஞர் சுதாகாந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இதில் சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×