என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்மார்ட் வகுப்புகள்"
- 10 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
- விழாவில் மாணவ - மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சபாநாயகர் அப்பாவு முயற்சியால் சுமார் 300 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கி வைத்து உள்ளார்.
அதன் ஒரு பகுதியாக பணகுடி பேரூராட்சி பகுதி களில் பணகுடி செயின்ட் ஜோசப் தொடக்கப் பள்ளி, டி .டி. .டி. ஏ. தொடக்கப் பள்ளி, பணகுடி திரு இருதய தொடக்கப்பள்ளி, வடக்கு இந்து நடுநிலை பள்ளி, அஸ்சே நடுநிலைப்பள்ளி, தளவாய்புரம் டி.டி.டி.ஏ. நடு நிலைபள்ளி, வீர பாண்டி யன் இந்து தொடக்க பள்ளி, நதிப்பாறை இந்து தொடக்கப்பள்ளி, ரோஸ் மியாபுரம் டி.டி.டி.ஏ தொடக்க பள்ளி, ரோஸ் மியா புரம் அரசு உய்நிலைப் பள்ளி உள்ளிட்ட 10 பள்ளி களுக்கு ஸ்மார்ட் வகுப்பை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
இதில் பணகுடி பங்கு தந்தை இருதயராஜ், சேசு அருளானந்தம், பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர சுப்பிரமணியன், பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன், தி.மு.க. நகர செயலாளர் தமிழ்வாணன், பேரூராட்சி துணை தலைவர் புஷ்பராஜ், கவுன்சிலர்கள் முத்துக் குமார், பூங்கோதை, ஜெய ராம் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.