என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எள் விதைப்பு"
- அபிராமம் பகுதியில் மழை இல்லாததால் எள் விதைப்பு செய்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
- விவசாயிகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள அச்சங்குளம், தரைக்குடி, வல்லகுளம் உள்பட 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கோடை சாகுபடியாக எள் விதைப்பு செய்துவருகின்றனர்.
அதிக தண்ணீர் தேவை யின்றி குறைந்த ஈரப்பதத்தில் மகசூல் கிடைக்கக்கூடிய தன்மை வாய்ந்த எள் என்பதால் விவசாயிகள் எள் விதைப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பகுதியில் எள் முளைப்பிற்கு ஏற்ற மழை இல்லாததால்.எள் செடிகள் முளைப்பின்றி வறண்டு காணப்படுகிறது.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த விவசாயி பாலு கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பின் எள் விவசாயம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், எள் விதைப்பிலும் ஆர்வம் காட்டி எள் விதைப்பு செய்த நிலையில் போதிய மழை இல்லாததால் எள் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மனவேதனையை அளிக்கிறது என்றார்.