search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபில் சிபல்"

    • மத்திய அரசை கபில் சிபல் எம்.பி. கடுமையாக விமர்சித்து உள்ளார்.
    • மனசாட்சி இல்லாமல் ராகுல் காந்தியை அரசு பங்களாவை விட்டு வெளியேற சொல்லி உள்ளனர்.

    புதுடெல்லி:

    ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்ததை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதம் 22-ந்தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மக்களவையின் வீட்டு வசதி குழு நோட்டீசு அனுப்பி உள்ளது.

    இதையடுத்து மத்திய அரசை கபில் சிபல் எம்.பி. கடுமையாக விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மனசாட்சி இல்லாமல் ராகுல் காந்தியை அரசு பங்களாவை விட்டு வெளியேற சொல்லி உள்ளனர். இது சிறிய மனிதர்களின் அற்ப அரசியல் என விமர்சனம் செய்து உள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸ் மேலிடம் மீதான அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து விலகி கபில் சிபல் தனியாக அமைப்பை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தி லண்டனில் பேசிய உரைக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது
    • பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

    புதுடெல்லி :

    இந்தியாவில் ஜனநாயம் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக ராகுல் காந்தி லண்டனில் பேசிய உரைக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. இதனால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில்சிபல், ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பாராளுமன்றத்தின் முட்டுக்கட்டை ஏன்? அரசு என்றால் இந்தியா என்று பொருள் அல்ல. அதைப்போல இந்தியா என்றால் அரசு என்று பொருள் அல்ல. உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ அரசை விமர்சிப்பது குடிமக்களின் உரிமை. அதை இந்தியாவை விமர்சிப்பதாகவோ, தேசப்பற்று இல்லாததாகவோ கருத முடியாது' என குறிப்பிட்டு உள்ளார்.

    கடந்த காலங்களில் பிரதமர் மோடியும் இவ்வாறு பேசியிருப்பதாகவும் கபில்சிபல் கூறியுள்ளார்.

    ×