என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாதிரியார் தலைமறைவு"
- பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்று வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
- தலைமறைவான பாதிரியாரை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29), பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர் தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
குறிப்பாக பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள், 'வாட்ஸ்-அப் சாட்டிங்' பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின. இவர் சில பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்று வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் சில பெண்களிடம் பாதிரியார் 'வாட்ஸ்-அப்' மூலம் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலைமறைவான பாதிரியாரை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கேரளா அல்லது பெங்களூருவில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே போலீசார் கைப்பற்றிய பாதிரியாரின் லேப் டாப்பை ஆய்வு செய்தனர். அதில் மேலும் பல ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளது தெரியவந்தது.
- தனிப்படையினர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
- பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் செல்போன் எண் மற்றும் சிக்னல் மூலம் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்:
குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றியவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29).
விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ மட்டுமின்றி பெண்களுடன் புகைப்படம், ஆபாச சாட்டிங் என பாதிரியாரின் செக்ஸ் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செக்ஸ் புகாரில் சிக்கிய பெனடிக்ட் ஆன்றோ மீது, அடுத்தடுத்து புகார்கள் வந்ததால் அவர் தலைமறைவாகி விட்டார். பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி, நாகர்கோவில் சைபர் கிரைம் போலீ சில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை பிடிக்க 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அவர் கேரளா அல்லது பெங்களுரூவில் பதுங்கி இருக்கலாம் என தெரிகிறது.
இதனை தொடர்ந்து தனிப்படையினர் அங்கு ரகசியமாக சென்று கண்காணித்து வருகின்றனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் செல்போன் எண் மற்றும் சிக்னல் மூலம் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் அவரால் பாதிக்கப்பட்டோர், சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கலாம் என்றும் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம் என்றும், புகார் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
- கடந்த 13-ந் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் 27 வயதான பாதிரியார் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் தேவாலயத்துக்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். முதலில் அன்பாக பேசிய அவர் நாட்கள் செல்ல செல்ல இரட்டை அர்த்தத்தில் பேசி பெண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார். தன்னிடம் விழுந்த பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண்களின் ஆடைகளை கழற்றும்படி கூறி நிர்வாண நிலையில் வீடியோவும் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.
பின்னர் அந்த ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும், தனக்கு நடந்ததை வெளியே கூறினால் அவமானம் ஆகிவிடும் என்பதற்காக அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அவர் இளம்பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் அவர் பேசிய காட்சிகள், உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் என கிளுகிளுப்பூட்டும் பல காட்சிகள் வைரலாகி வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட புகைப்படம், அடுக்கடுக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் பாதிரியார் தன்னுடைய பணியை ராஜினாமா செய்து விட்டதாகவும் சமூகவலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஆலயத்திற்கு வேறு பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிரியார் மீதான பிடி இறுகுவதால் போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே கடந்த 13-ந் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் பாதிரியார் இளம்பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார். அதோடு பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்களையும், பதிவுகளையும் ஒப்படைப்பதாக அவர் கூறினார். ஆனால் அதற்குள் அனைத்து வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிரியாரின் செல்போன் மற்றும் லேப்-டாப்பில் பல்வேறு ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மை தெரியவரும்.
பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட பாதிரியாரின் ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில் சம்பந்தப்பட்ட பாதிரியார் அரசியல் கட்சி தலைவர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.
இந்த பரபரப்புக்கு இடையே பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில், "நான் பாதிரியார் பணியாற்றிய ஆலயத்துக்கு சென்றேன். முதலில் சாதாரணமாக பேசி ஆசி வழங்கினார். பின்னர் தவறான முறையில் என்னை தொட்டு பேச தொடங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட ஆலய பங்கை விட்டு மாறி நாங்கள் சென்று விட்டோம். எனினும் அவர் என் தாயாரிடம் எனது செல்போன் நம்பரை வாங்கி பேசினார்.
ஒரு கட்டத்தில் செய்வதறியாது நானும் பேசினேன். ஆனால் பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப்பில் பேசினார். வீடியோ கால் செய்தும் தொந்தரவு செய்தார். என்னை மட்டுமல்லாது பல பெண்களிடம் இவ்வாறாக அவர் நடந்து கொள்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டு எச்சரித்தேன். நான் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறினேன். அதற்கு என்னை மிரட்டினார். எனவே இதுதொடர்பாக பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
நர்சிங் மாணவி புகாரை தொடர்ந்து பாதிரியாரின் லீலை விவகாரம் வேகம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்