search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணு ஆயுத தாக்குதல்"

    • கற்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷியாவில் உயர்நிலை பள்ளி வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அணு ஆயுத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் கற்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    "தாய்நாட்டை பாதுகாக்கும் அடிப்படைகள்" எனும் பாடத்தின் கீழ் போரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பான பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அந்நாட்டு கல்வித்துறை சார்ந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    இந்த பயிற்சியின் கீழ், உக்ரைனுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் திடீரென அணு ஆயுத போராக மாறும் பட்சத்தில் மாணவர்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்வர். மாணவர்கள் பேரழிவு ஆயுதங்களின் திறன் மற்றும் அவற்றின் சேதப்படுத்தும் விளைவுகள், அதில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் கற்றுக் கொள்வர்.

    இதோடு இயற்கை, மனிதர்களால் உருவாக்கப்படும் மற்றும் உயிரியல் சமூக இயற்கை பேரிடர்கள் மற்றும் ராணுவ பேராபத்து உள்ளிட்ட அவசர கால நிலைகளில் மாணவர்கள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வர். இத்துடன் அடிப்படை ராணுவ பயிற்சி, கலாஷ்நிகோவ் ரைஃபிள், கையெறி குண்டுகளை எப்படி கையாள வேண்டும் என்பதும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட இருக்கிறது.

    • அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக போராட ராணுவத்தில் சேர சுமார் 14 லட்சம் பேர் முன்வந்துள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    பியாங்யாங்:

    வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவும் தென்கொரியாவும் அமெரிக்க அணு ஆயுதங்களை உள்ளடக்கிய கூட்டுப்போர் பயிற்சிகளை விரிவுபடுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ளவும், போரைத் தடுக்கவும் எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதல்களை நடத்தத் தயாராக ராணுவம் இருக்க வேண்டும்" என கூறினார்.

    இதனிடையே அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக போராட ராணுவத்தில் சேர சுமார் 14 லட்சம் பேர் முன்வந்துள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    ×