search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரணியல் நீதிமன்றம்"

    • டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறின்போது கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்தது.
    • போலீசார் கதவை உடைத்து கழிவறைக்குள் சென்று தற்கொலைக்கு முயன்ற ராஜனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே நீதிமன்ற கழிவறையில் கொலை வழக்கு கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள சாத்தங்கரை பகுதியைச் சேர்ந்த கபடி ஆசிரியர் அருள்பாதி என்பவர் கடந்த ஜனவரி மாதம், மார்பில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்தார். சந்தேக மரணம் என்ற பிரிவில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது இரணியல் அருகே உள்ள நெய்யூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர், டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறின்போது அருள்பாதியை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ராஜனை போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக ராஜனை போலீசார் இன்று இரணியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக காத்திருந்த ராஜன், கழிவறைக்கு செல்ல வேண்டும் என போலீசாரிடம் கூற, அவர்களும் கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் கழிவறைக்கு சென்றவுடன் கதவை உள்தாழ்ப்பாள் போட்ட ராஜன், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் தரையில் விழுந்து துடிதுடித்தார். அலறல் சத்தம் கேட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போலீசார் ராஜனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    ×