என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாசல்களின் முன்பு மண்டை ஓடு"
- புதுப்பேட்டை அருகே கோட்டலாம்பாக்கம் சித்த வட மடம் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.
- பல்வேறு வீடுகளின் முன்பாக மை பூசப்பட்ட மண் ஓடு கிடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, புதுப்பேட்டை அருகே உள்ளது கோட்டலாம்பாக்கம் சித்த வட மடம் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் இருந்து இருந்து 100 மீட்டர்கள் தூரத்தில் உள்ள வீதியில் ஒரு வீட்டின் முன் மனித உடலின் மண்டை ஓடு கிடந்தது. இந்த மண்டை ஓட்டில் மை பூசப்பட்டு இருந்தது. இந்த மண்டை ஓட்டை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் கூறலாம் என்று சென்ற போது அங்கும் இதே பொருட்கள் கிடந்துள்ளது. இதே போல அந்த வீதியில் இருந்த பல்வேறு வீடுகளின் முன்பாக மை பூசப்பட்ட மண் ஓடு கிடந்தது. சில வீடுகளின் முன்பு கால் எலும்புகளும் கிடந்தன.
அப்போது அங்கு வந்த மாற்றுத் திறனாளி சங்கர், சாலையில் கிடந்த எலும்புகளை சேகரித்து அருகில் இருந்த ஏரியில் வைத்து எரித்தார். இதையடுத்து அந்த வீதியில் வசிக்கும் பொது மக்கள் புதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்தனர். மர்ம நபர்கள், விஷமிகள் யாராவது இப்படி செய்து இருக்கலாம். மந்திரம், தந்திரம் தெரிந்த நபர்கள் இப்படி செய்து இருக்கலாம். மக்களை அச்சுறுத்த வேண்டும். பயமுறுத்த வேண்டும் என்று இவர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், மாற்றுத்திறனாளி சங்கரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் எரிக்கப்பட்ட மண்டை ஓடு, எலும்புகளை கைப்பற்றி ஆய்து செய்து வருகின்றனர். கடலூரில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பல்வேறு வீதிகளில் வசிப்பவர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அந்த வீதியே போர்க்களம் போல காணப்பட்டது. இதனால் பண்ருட்டி பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.