search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித நீர் ஊற்றி"

    • கம்பங்கள் நடும் விழா நடந்தது.
    • பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவி ல்களான சின்ன மாரி யம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்க ளில் இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடும் விழா நடந்தது. இரவு 8.30 மணிக்கு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அந்தந்த கோவில்களில் வந்தடைந்தது.

    முதல் கம்பம் பெரிய மாரியம்மன் கோவிலும், 2-வது கம்பம் சின்ன மாரியம்மன் கோவிலும், 3-வது கம்பம் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இரவு முதலே பெரிய மாரியம்மன் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையில் நின்று கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்ட சென்றனர்.

    அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை முதல் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு சென்றனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    ×