search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் செய்தி"

    • பரமத்தி அருகே சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி பெண் பலியானர்.
    • விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

    பரமத்திவேலூர்,

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நல்லியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌஸ். இவரது மனைவி சசிகலா என்கிற மும்தாஜ் (வயது 64). இவர் நேற்று காலை பரமத்தி அருகே உள்ள மரவாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சசிகலா என்கிற மும்தாஜ் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து பார்த்து இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூரை அடுத்த வாழவந்தி அருகே தீயில் காயம் அடைந்த இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.
    • சம்பவத்தன்று இளம்பெண் அடுப்பை பற்ற வைக்க மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ பிடித்ததால் கருகி பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன். கூலித் தொழி லாளி. இவரது மனைவி நீலாவதி (வயது 34). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள்ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    நீலாவதி கடந்த 17-ம் தேதி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடுப்பு எரியாததால் மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ குபுவென வெளியேறி நீலாவதி அணிந்திருந்த துணியில் பிடித்தது.

    தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. அவருடைய அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீலாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீலாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகருக்கு பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அதேபோல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர்,கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநா யகர், பேட்டை விநாயகர், பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்க ளில் சதுர்த்தியை முன்னி ட்டு சிறப்பு அபி ஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×