search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொப்பரை தேங்காய் கொள்முதல்"

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 15டன் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது
    • ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ. 108.60-க்கு அதிகாரிகள் கொள்முதல் செய்தனர். உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான மாரண்டஅள்ளி, அமானிமல்லாபுரம், பெல்ரம்பட்டி, காரிமங்கலம், அத்திமுட்லு, சாஸ்திர முட்லு, கும்மானூர், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர்.

    தொடர் மழை பெய்ததால் தேங்காய் உற்பத்தி அதிகரித்த நிலையில் பாலக்கோடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 15டன் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

    வெளி மார்க்கெட்டில் விலை குறைவாக இருப்பதினால் மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ. 108.60-க்கு அதிகாரிகள் கொள்முதல் செய்தனர். உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொப்பரை தேங்காய் கொள்முதல் நடைபெறும் எனவும், ஒரு மாதத்திற்குள் 100 முதல் 200 டன் வரையிலும் அதிகபட்சமாக ஆயிரம் டன் வரையிலும் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் எனவும் விவசாயிகள் பயனடையுமாறு வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

    கொப்பரை தேங்காய் கொள்முதலின் போது வேளாண்மை மேற்பார்வையாளர் பிரியா, வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வம், சத்யா, முனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கோவையில் உள்ள 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடக்கிறது.
    • நடப்பாண்டு 22 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    தமிழகத்தில் ஆண்டுதோ றும் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    கோவை மாவட்டத்தில் அன்னூர், ஆனைமலை, பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு, செஞ்சேரி, சூலூர், தொண்டாமுத்தூர், காரமடை, கோவை ராமநாதபுரம் ஆகிய 10 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    எனவே விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை விற்பனை செய்து பயன் பெற வேண்டும் என்று வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கோவை வேளாண் விற்பனை குழு முதுநிலை மேலாளர் சாவித்ரி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 6 மாத காலத்துக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. நடப்பாண்டு 22 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து அரவை கொப்பரை ரூ.108,60-க்கும், பந்து கொப்பரை ரூ.117-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கொப்பரைகளை வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×