search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகலச பூஜை"

    • கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடந்தது
    • கோவில் கும்பாபிஷேகம் வருகிற மே மாதம் 5-ந்தேதி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    சென்னைஅருகே உள்ள நீலமங்கலம் சாஸ்திரா லயத்தில் 48 அடி உயரமும் 300 டன் எடையும் உள்ள கற்களைக்கொண்டு பாரத மாதா கோவில் அமைக்கப் பட்டு வருகிறது.

    இந்தகோவிலை சுவாமி பிரம்ம யோகானந்தா தலைமையிலும் அவரது சீடர்களின் முயற்சியிலும் ஒரு தவமாகவே மேற்கொண்டு இந்த கோவில் கட்டும் திருப்பணி நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. இந்த கோவில் கட்டும் பணி கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது.இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற மே மாதம் 5-ந்தேதி நடக்கிறது.

    இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகிலபாரத தலைவர் மோகன்பகவத் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து இந்த கோவிலின் கோபுர கலச பூஜை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத் தில் நேற்று நடந்தது. பின்னர் விவேகானந்தா கேந்திராவில் உள்ள ராமாயண அரங்கத்தில் கோபுர கலசத்துக்கு பூஜை மற்றும் சுவாமி பிரம்ம யோகானந்தாவின் சத்சங்கம் நிகழ்ச்சியும் நடந்தது.

    நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜன், அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன், மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ×