என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாராளுமன்ற கட்டிடம்"
- டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
- 8ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார்.
புதுடெல்லி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியிருப்பதாவது:-
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை இணைக்க பாராளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்பட வேண்டியது அவசியம்.
8ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார். பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.
பாராளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது. அந்த செங்கோலை புதிய பாராளுமன்ற திறப்பு விழாவின்போது பிரதமரிடம் ஆதீனங்கள் ஒப்படைக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு கண்டனம்.
- திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்து எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கின்றனர்.
சென்னை:
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இதையடுத்து, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்திருந்த நிலையில் தி.மு.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கின்றனர்.
- புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
- பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி:
தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிட பணிகள் முடிவடைந்தது.
இதையடுத்து புதிய கட்டிடத்தை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, "புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" என்று கூறியுள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர். "பிரதமர் மோடி, அரசு நிர்வாகத்தில் உள்ளார். ஜனாதிபதி, இந்தியாவின் தலைவராக உள்ளார். அவர்தான் பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும்" என்று கருத்து கூறி உள்ளனர்.
- புதிய பாராளுமன்றத்தின் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
- பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் ஆகியோர் இரு அவைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வசதிகளையும் பார்வையிட்டனர்.
தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாக பாராளுமன்றம் கட்டப்படுகிறது.
டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் புதிய பாராளுமன்றத்தை கட்டி வருகிறது. இந்தியாவின் ஜனநாயக பெருமையை பறைசாற்றும் பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், உணவு அருந்தும் பகுதி, விசாலமான வாகன நிறுத்த பகுதி ஆகிய வசதிகள் இடம்பெறுகின்றன.
கட்டுமான பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை திடீரென புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டார். மேலும், அங்கு நடைபெற்றும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன் அங்குள்ள பணியாளர்களிடமும் பேசினார்.
பிரதமர் மோடி அங்கு சுமார் ஒரு மணி நேரம் செலவழித்தார். மேலும், பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் ஆகியோர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வசதிகளையும் பார்வையிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்