search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி மழை"

    • பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
    • நபி கரீம் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று டெல்லியில் பலத்த மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. டெல்லி-குருகிராம் விரைவுச்சாலையில் டெல்லி செல்லும் பிரதான பாதை மற்றும் சர்வீஸ் லேன் ஆகியவற்றில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழையால் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானம் திருப்பி விடப்பட்டது. நபி கரீம் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் டெல்லிக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் மொராதா பாத்தில் கனமழை, காற்றின் காரணமாக கரும்பு மற்றும் நெல் பயிர்கள் அழிந்தன. உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மலையில் இருந்து கற்கள், மணல் விழுந்தது. இதனால் அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டது.

    • சுமார் ரூ.7 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார் ஒன்று தண்ணீர் தேங்கிய சாலையில் பழுதாகி நிற்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • காரின் விலை முக்கியமில்லை. நாம் விரும்பும் நேரத்தில் செல்ல வேண்டும். அது தான் முக்கியம்.

    டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. பரபரப்பான சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சுமார் ரூ.7 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார் ஒன்று தண்ணீர் தேங்கிய சாலையில் பழுதாகி நிற்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பொதுவாக சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் போது அதில், வாகனங்கள் சீறிபாய்ந்து செல்லும் நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் பழுதாகி நிற்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதைப்பார்த்த இணைய பயனர்கள் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். காரின் விலை முக்கியமில்லை. நாம் விரும்பும் நேரத்தில் செல்ல வேண்டும். அது தான் முக்கியம். ரோஸ் ராய்ஸ் கார் பழுதாகி நிற்பதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. டெல்லியின் உள்கட்டமைப்பு எவ்வாறு இருக்கிறது என்பது வருத்தப்பட வைக்கிறது என ஒரு பயனர் கூறியுள்ளார்.



    • டெல்லியில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • இரு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கனமழையால் டெல்லியில் வெள்ளம் சூழ்ந்ததால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் டெல்லியில் இன்னும் இரு நாட்களுக்கு கனமழை தொடரும்.

    இதற்கிடையே, டெல்லியில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் 228.1 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    • கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
    • இன்றும், நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக டெல்லியில் வெள்ளம் சூழ்ந்ததால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும்.

    டெல்லியில் பருவமழை தொடங்கிய முதல் நாளில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை மட்டும் டெல்லியில் 228.1mm அளவு மழை பெய்துள்ளது. கடந்த 1936 ஆண்டுக்கு பிறகு, ஒரே நாளில் பெய்த அதிகனமழை இது ஆகும். 

    • டெல்லியில் நேற்று இரவும் இன்று அதிகாலையிலும் மீண்டும் பலத்த மழை பெய்தது.
    • டெல்லியில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களின் வீடுகள் மழை தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடந்த 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பலத்த மழைபெய்தது.

    இதன் காரணமாக டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இடுப்பு அளவுக்கு தண்ணீர் கரை புரண்டு ஓடியதால் டெல்லியில் நேற்று 60 சதவீத அளவு போக்குவரத்து முடங்கியது.

    பலத்த மழை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 1-வது முனையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் வாடகை கார் டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம்மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார். நேற்று பிற்பகல் வரை அந்த விமான நிலைய பகுதியை சீரமைக்கும் பணிகள் நடந்தது. அதன் பிறகு இன்று (சனிக்கிழமை) விமான போக்குவரத்து சீரடைந்து வருகிறது.

    இதற்கிடையே டெல்லியில் நேற்று இரவும் இன்று அதிகாலையிலும் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேக்கம் தொடர்ந்து காணப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக வாகன போக்குவரத்தில் கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி நகரம் ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்து விட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சுரங்கப் பாதைகள் அனைத்திலும் இன்னும் தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

    டெல்லியில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களின் வீடுகள் மழை தண்ணீரில் மூழ்கி உள்ளன. சுமார் 16 இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி இருக்கிறார்கள். டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் சுவர் இடிந்து 3 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    டெல்லியில் இன்னும் 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் டெல்லி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.

    தொடர் மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகள் அனைத்திலும் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் வாகன போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக பலத்த மழை பெய்வதற்கான ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு டெல்லி அரசு எச்சரித்துள்ளது.

    டெல்லியில் சுமார் 80 சதவீத பகுதிகளில் தண்ணீர் தேக்கம் காணப்படுவதால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். பல பகுதிகள் இருளில் மூழ்கி காணப்பட்டன.

    மழை நின்ற பிறகுதான் மின் இணைப்புகள் சீராகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கையில் மேலும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    • டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், தனது விமானம் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்ததாக தெரிவித்தார்.
    • அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 36.8 டிகிரி செல்சியசாக இருந்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. கடுமையான வெயிலில் தவித்த பொதுமக்கள் சிறிது நேரம் பெய்த மழையால் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் பல விமானங்களும் தாமதமாக வந்தன.

    இந்த விமானங்களில், 9 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், தலா 2 விமானங்கள் அமிர்தசரஸ் மற்றும் லக்னோவிற்கும், தலா ஒரு விமானம் மும்பை மற்றும் சண்டிகருக்கும் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், தனது விமானம் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்ததாக தெரிவித்தார்.

    இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறும் போது, டெல்லியில் வானிலை திடீரென மாறியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 36.8 டிகிரி செல்சியசாக இருந்தது. பலத்த காற்றும் லேசான மழையும் பெய்தது. அடுத்த 7 நாட்களுக்கு டெல்லியில் வெப்ப அலைக்கான சாத்தியம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

    • தென்மேற்கு டெல்லி வசந்தவிகார், முகிர்தா, ஆர்.கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை கொட்டியது.
    • மழை காரணமாக டெல்லி-நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    தென்மேற்கு டெல்லி வசந்தவிகார், முகிர்தா, ஆர்.கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    மழை காரணமாக டெல்லி-நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது. வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

    டெல்லியில் மேலும் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது.
    • டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது.

    தொடர் மழை காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவிலும் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.

    பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    டெல்லியில் தொடர்ந்து மழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் யமுனை நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

    டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    • யமுனை ஆற்றில் மறுபடியும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் டெல்லியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் யமுனை ஆற்றில் மறுபடியும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. நேற்று காலை யமுனையில் 205.96 மீட்டர் அளவாக இருந்த நீர்மட்டம் இரவு 9 மணி அளவில் 206.42 மீட்டராக உயர்ந்தது.

    இன்று காலை இது 206.56 மீட்டர் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    யமுனையில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கரையோரம் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். டெல்லியில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • யமுனை ஆற்றின் நீர் ஊருக்குள் புகுந்ததால் டெல்லி நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது
    • தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், மீண்டும் கனமழை மிரட்டி வருவதால் வெள்ள அபாயம் நீங்கவில்லை

    கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுடெல்லியில் 3 நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த யமுனை ஆற்றின் நீர்மட்டம் தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்திருக்கிறது. இருப்பினும் மக்களை செல்பி எடுக்கவோ அல்லது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குளிக்கவோ வேண்டாம் என்று புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

    நேற்று வடமேற்கு டெல்லியின் முகுந்த்பூர் சௌக் பகுதியில் வெள்ளத்தால் தேங்கிய நீரில் குளித்த 3 சிறுவர்கள், பள்ளத்தில் மூழ்கி இறந்தனர். இந்த செய்தி வந்த ஒரு நாளுக்குப் பிறகு முதல்வரின் வேண்டுகோள் வந்திருக்கிறது.

    அவர் டுவீட் செய்திருப்பதாவது:-

    சிலர் விளையாடவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ வெள்ள நீரில் செல்வதாக பல இடங்களிலிருந்து செய்திகள் வருகின்றன. தயவு செய்து இதை செய்யாதீர்கள். நீங்கள் உயிரிழக்க நேரிடும். வெள்ள அபாயம் இன்னும் தீரவில்லை. தண்ணீர் ஓட்டம் மிகவும் வலிமையானது. நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    சாந்திவன் பகுதியில் குழந்தைகள் வெள்ளத்தில் விளையாடும் ஒரு வீடியோவை இணைத்து பதிவிட்ட கெஜ்ரிவால், "இதுபோன்ற செயல்களை தவிர்க்கவும்" என அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பல நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து, நகரின் யமுனை நதியில் நீர்மட்டம் ஆபாய கட்டத்தை தாண்டியது. இதனால் புதுடெல்லியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 208.66 மீட்டராக இருந்த நீர்மட்டம், இன்று காலை 10 மணியளவில் 207.48 மீட்டராக குறைந்துள்ளது. இருப்பினும் அபாய கட்ட அளவை (205.33 மீட்டர்) தாண்டி 2 மீட்டருக்கு மேல் உயர்ந்தது.

    இந்திர பிரஸ்தா பகுதி ரெகுலேட்டரில் (வடிகால் சீராக்கும் கருவி) ஏற்பட்ட உடைப்பினால், நகரின் ஐடிஓ (ITO) அருகே உள்ள பகுதி மற்றும் ரிங் ரோடு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சாந்திவனில் இருந்து கீதா காலனி வரையிலான ரிங் சாலையின் இரு பாதைகளிலும் கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் இதர இலகு ரக வாகனங்கள் செல்ல டெல்லி போக்குவரத்து காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், சாந்திவனில் இருந்து ராஜ்காட் மற்றும் ஐஎச்பிடி (ISBT) நோக்கி செல்லும் சாலை இன்னும் மூடப்பட்டுள்ளது.

    • மெட்ரோ கட்டுமானப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெள்ளத்தில் குளிக்க குதித்தனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    வடமாநிலங்களில் பெய்த பேய்மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லி வெள்ளத்தில் மூழ்கியது.

    டெல்லியில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் டெல்லி அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியின் முகுந்த்பூரில் தேங்கி இருந்த வெள்ள நீரில் குளித்த மூன்று சிறுவர்கள் அதில் மூழ்கி உயிரிழந்தனர்.

    டெல்லி முகுந்த்பூரில் உள்ள மெட்ரோ கட்டுமானப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெள்ளத்தில் குளிக்க குதித்த சிறுவர்கள் நீரில் மூழ்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வெள்ளத்தில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    உயிரிழந்த சிறுவர்கள் பியூஷ் (13), நிகில் (10), ஆஷிஷ் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தென்மேற்கு பருவமழையால் வடஇந்தியாவில் பேய்மழை
    • இமாச்சல பிரதேசம், டெல்லியில் எங்குபார்த்தாலும் வெள்ளம்

    தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில பேய்மழை பெய்தது.

    இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அணைகளிலும் நீர்மட்டம் ஜெட்வேகத்தில் உயர்ந்துள்ளது. ஹரியானா மாநிலம் யமுனா நகரில் அமைந்துள்ள ஹத்னிகுண்டு தடுப்பணையை அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை காரணமாக திறந்து விட்டது.

    இதனால் டெல்லி மாநிலத்தில் யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. நேற்று மாலை 205.33 மீட்டரை தாண்டியது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழைய ரெயில் பாலம் அருகில் 206.28 மீட்டரை தாண்டியது. இன்று மதியம் 206.65 மீட்டரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் ''வெள்ள அபாயம் மோசமான நிலையில்தான் உள்ளது. ஆனால், அரசு எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளது. 206 மீட்டரை தாண்டும்போது மக்களை வெளியேற்றும் பணி தொடரும்'' என்றார்.

    கிழக்கு டெல்லியின் சில இடங்களில் நேற்றிரவில் இருந்து அதிகாரிகள் மக்களை வெளியேற்றி வருகின்றனர். அதிகாரி ஒருவர் ''பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் மட்டும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்'' என்றார்.

    ஹரியானா மாநிலம் 3 லட்சம் கனஅடி நீரை திறந்து விடுவதால் யமுனை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 352 கனஅடி நீர்தான திறந்து விடப்படும். தற்போது அதிகமாக திறந்து விடப்ப்டுள்ளது. தடுப்பணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் டெல்லியை வந்தடையும்.

    ஏற்கனவே, வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 16 கட்டுப்பாட்டு அறைகளையும் திறந்து கண்காணித்து வருகிறது.

    உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உள்ளிடக்கியது யமுனை ஆறு. டெல்லியில் சுமார் 41 ஆயிரம் மக்கள் தாழ்வான பகுதியில் வசித்து வருகிறார்கள்.

    யமுனை ஆற்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீர் அளவு (206.38) அபாயம் கட்டத்தை எட்டியது. 2019-ல் ஆகஸ்ட் 18 மற்றும் 19-ந்தேதிகளில் 8.28 லட்சம் கனஅடி நீர் வரத்தால் 206.6 மீட்டர் அளவை எட்டியது. 2013-ல் 207.32 மீட்டரை தொட்டது.

    ×