search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி தீ விபத்து"

    • இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிப்பு.
    • கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு டெல்லியில் இதுபோன்ற 3 கிளினிக்குகள் உள்ளன.

    டெல்லி மருத்துவமனை தீ விபத்து விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தகுதியில்லா மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

    ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவிகள் இல்லை என்பதும் எமர்ஜென்சி எக்ஸிட்களும் மருத்துவமனை நிர்வாகத்தால் திறக்கப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட உரிமம் மார்ச் 31ம் தேதியோடு காலாவதியாகி உள்ளது.

    கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு டெல்லியில் இதுபோன்ற 3 கிளினிக்குகள் உள்ளன.

    5 படுக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சம்பவத்தின்போது மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் தொடரபாக உரிமையாளர் கைது செய்யப்பட் நிலையில் மருத்துவமனை இயக்குனராக டாக்டர் நவீன் கிச்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • கொசு விரட்டி சுருள் திடீரென மெத்தை மீது விழுந்ததால் தீ விபத்தும் ஏற்பட்டது. இதனால் வீடு முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.
    • தீ விபத்து ஏற்பட்டது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    புதுடெல்லி:

    வடகிழக்கு டெல்லி சாஸ்திரி பார்க் பகுதி மசார்லாலா ரோட்டில் உள்ள வீட்டில் நேற்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தூங்கி கொண்டு இருந்தனர்.

    டெல்லியில் தற்போது கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் அவர்கள் வீட்டுக்குள் கொசு விரட்டி சுருளை கொளுத்தி வைத்து இருந்தனர். இதில் இருந்து அதிக அளவு புகை வந்தது. அந்த புகையுடன் கார்பன் மோனாக்சைடு வெளியானதால் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவர்களை பாதித்தது. அப்போது கொசு விரட்டி சுருள் திடீரென மெத்தை மீது விழுந்ததால் தீ விபத்தும் ஏற்பட்டது. இதனால் வீடு முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.

    ஏற்கனவே கொசு விரட்டி சுருளில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்தாலும், தீயால் வீட்டை தீ சூழ்ந்ததாலும் அவர்களால் வெளியில் வரமுடியவில்லை. இதில் சிக்கி கொண்ட ஒரு குழந்தை, பெண் உள்பட 6 பேர் இறந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்டது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    அப்போது தான் வீட்டுக்குள் 6 பேர் பிணமாக கிடப்பது தெரிந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 15 வயது சிறுமி உள்பட 2 பேர் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×