என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உணவு கண்காட்சி"
- ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ,
- புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 29-ந்தேதி காலை 11 மணிக்கு சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை,
ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே பாரம்பரிய குணமான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 29-ந்தேதி காலை 11 மணிக்கு சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் இக்கண்காட்சியில் சிறு தானிய உணவின் நன்மைகள், பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெறும். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
அரசு துறைகள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆகிய அமைப்பு களால் சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்ப டுத்தப்பட உள்ளது. இதில் முதல் மூன்று இடத்திற்கான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- விழிப்புணர்வு போர்டுகளை கையில் ஏந்தி புராதன சின்னங்கள் பகுதியில் ஊர்வலம் சென்றனர்.
- மகளிர் சுய உதவி குழுவினர் சத்துள்ள உணவுகளை வீட்டில் தயாரித்து எடுத்து வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் தூய்மை திருவிழா நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர் ஒன்றிணைந்து விழிப்புணர்வு போர்டுகளை கையில் ஏந்தி புராதன சின்னங்கள் பகுதியில் ஊர்வலம் சென்றனர்.
தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் தேவையான சத்துள்ள உணவுகள் குறித்து, பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் சத்துள்ள உணவுகளை வீட்டில் தயாரித்து எடுத்து வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தனர். பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்