search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி பணியாளர்கள் போராட்டம்"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மனு அளிக்கும் போராட்டம் திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    அப்போது மாவட்ட தலைவர் சம்பத்ராவ் தலைமையிலான நிர்வாகிகள் இணைப்பதிவாளர் நடராஜனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாய கடன்கள், மத்திய கால கடன்கள், நகைக்கடன்கள் வழங்குதல், பொது வினியோக திட்டப்பணிகள், உரம் வினியோகம், சேவை மையங்கள் என பலநோக்கு சேவைகளையே புரிந்து வருகின்றன.

    முந்தைய அரசால் விதி 110-ன் கீழ் டிராக்டர், தெளிப்பான்கள், உழவுகருவிகள், மண் பரிசோதனை நிலையங்கள், சிறு போக்குவரத்து வாகனங்கள் என அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டு வாங்கப்பட்டன.

    இவைகள் பயன்படுத்த இயலாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவைகளால் எவ்வித லாபமும் ஈட்டப்படவில்லை. மாறாக சங்கங்கள் இதன் மூலம் நஷ்டத்தையே சந்திக்கின்றன. தற்போது பல்நோக்கு சேவை மற்றும் வேளாண்மை உட்க ட்டமைப்பு திட்டத்தின்கீழ் போக்குவரத்து வாகனங்கள் பவர்டிரில்லர்கள் என மோட்டார் வாகனங்களும் சங்க விவகார எல்லையில் செய்ய இல்லாத தொழில்களை செய்ய வற்புறுத்தியும் செயலாளர்களிடம் ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டு மும்முரமாக எந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறான நிலையில் வாங்கப்படும் எந்திரங்கள் செய்ய வற்புறுத்தப்படும் தொழில்கள் சாத்தியமானதா, மக்களுக்கு பயன்பாடு ஏற்படுமா, சங்கங்கள் இதன் வழி லாபம் ஈட்ட முடியமா என்பதை மீண்டும் பரிசீலனை செய்து சாத்தியத்திற்கு உள்ளானவைகளை மட்டும் நடைமுறைப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நஷ்டத்தில் செயல்படும் சங்கங்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய வற்புறுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும்.

    இவ்வாறு செய்யப்படும் தொழில்களில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படு ம்ப ட்சத்தில் பணியாளர்களையும் நிர்வா கத்தையும் பொறுப்பாக்கபடமாட்டது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

    எனவே எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×