search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை விபத்து"

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யம்பேட்டை:

    சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்றிரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பழனிவேல் ஓட்டினார். கண்டக்டராக தஞ்சை ஜெபமாலைபுரத்தை சேர்ந்த வினோத் பணியில் இருந்தார்.

    இந்த பஸ் இன்று காலை தஞ்சை அருகே அய்யம்பேட்டையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பைபாஸ் சாலை திருப்பத்தில் பஸ்சை டிரைவர் திருப்ப முயன்றார். இதில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. பயணிகள் காப்பாறுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் டிரைவர் பழனிவேல், கண்டக்டர் வினோத், தஞ்சை காசவளநாடுபுதூர் தொழிலாளி ராஜசேகர் (வயது 34) உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த அய்யம்பேட்டை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் ராஜசேகர் இறந்தார். தொடர்ந்து 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விபத்தில் பலியான முனியாண்டி, மதியழகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள கன்னிதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி (வயது 60), மதியழகன் (55 ), சுப்பிரமணி (54). அனைவரும் கூலித் தொழிலாளிகள்.

    இவர்கள் 3 பேரும் வடுவூர் அருகே உள்ள புள்ளவராயன் குடிகாட்டில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை மூன்று பேரும் வீட்டில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அப்போது புலவர் நத்தம் பகுதியில் சென்றபோது அங்கு உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்ப முடிவு செய்தனர்.

    இதற்காக மோட்டார் சைக்கிளை பெட்ரோல் பங்க் வளைவில் திருப்பினர். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனியாண்டி உள்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த மினி லாரி சாலையில் கிடந்த மூன்று பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் முனியாண்டி, மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சுப்பிரமணி பலத்த காயம் அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான முனியாண்டி, மதியழகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 40 பேர் சிகிச்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×