search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காக்கும்"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கி பேசியதா வது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொதுமக்களை சார்ந்த அரசாக திகழ்வதால், ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகிறது. கலைஞர் ஏழை விதவை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதிஉதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம் என நான்கு வகையான திருமண உதவி திட்டங்களுக்கு 2022-2023 நிதி ஆண்டில் 55 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் திரு மாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதில் பட்டதாரிகள் 52 நபர்கள் மற்றும் பட்டதாரி அல்லாத 3 நபர்கள் என 55 நபர்களுக்கு தங்க நாணயங்களும், ஒரு பட்டதாரிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 52 பட்டதாரிகளுக்கு ரூ.26 லட்சமும், பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 3 நபர்களுக்கு ரூ.75 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. 2021- 2022 நிதியாண்டில் 10-ம் வகுப்பு படித்த 970 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ. 2.425 கோடி திருமண நிதியுதவியும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 2380 ஏழைப்பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.11.90 கோடி, திருமண நிதியுதவியும் மற்றும் 8 கிராம் எடையுள்ள 3350 தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்கு டாக்டர் கலைஞர் மூன்று உன்னதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை சிறப்பாக செயல்படுத்தி அனைத்துத்தரப்பட்ட மகளிர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள்.

    கலைஞர் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்கென இரண்டு உன்னதமான திட்டங்களை அறிவித்துள்ளார். அவற்றில் பெண்கள் இடைநிற்றலை தவிக்கும் வகையிலும், அரசுப்பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் நோக்கிலும் புதுமைப்பெண் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியினை இரண்டு கட்டங்களாக தொடங்கி வைத்ததின் அடிப்படையில், குமரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 149" கல்வி நிறுவனங்களிலிருந்து 3168 ஏழை, எளிய மாணவியர்கள் ரூ.1000 உதவித்தொகை பெற்று வருகின்றனர்.

    இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிவிக்கையில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள். இவ்வாறு பெண்களின் வாழ்வில் ஏற்றம் பெற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்வதோடு, ஏழை மக்களின் நலன் காக்கும் அரசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூதலிங்கம் பிள்ளை, மாவட்ட சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×