search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜத் படிதார்"

    • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன.
    • இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.

    அடுத்த சுற்று வாய்ப்புக்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிபிடித்து புதிய சரித்திரம் படைத்த பஞ்சாப் அணி தர்மசாலாவில் அரங்கேறிய கடந்த லீக் ஆட்டத்தில் 28 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.

    தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங் (315 ரன்), பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், ரபடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார்.

    தங்களது உள்ளூர் மைதானங்களான முல்லாப்பூரில் 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 தோல்வியும், தர்மசாலாவில் ஒன்றில் ஆடி அதில் தோல்வியும் கண்டுள்ள பஞ்சாப் அணி சொந்த மைதானத்தில் தங்களது பரிதாப நிலையை மாற்ற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    பெங்களூர் அணி

    இதேபோல் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.

    முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டு பெருத்த சரிவை சந்தித்த பெங்களூரு அணி கடந்த 3 ஆட்டங்களில் வரிசையாக ஐதராபாத் மற்றும் குஜராத்தை 2 முறை அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்கள்), கேப்டன் டுபிளிஸ்சிஸ் (352), தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், வில் ஜாக்சும், பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார் அல்லது ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரபடா.

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள் அல்லது ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • முதல் போட்டியில் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் இன்று விளையாடமாட்டார்.
    • ரஜத் படிதார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    முதலாவது ஆட்டத்தில் 116 ரன்னில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 16.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. பந்து வீச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் (5 விக்கெட்), ஆவேஷ் கான் (4 விக்கெட்) மிரட்டினார்கள். பேட்டிங்கில் அறிமுக வீரர் சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தினர்.

    டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஷ்ரேயாஸ் அய்யர் 2-வது, 3-வது ஒருநாள் போட்டியில் ஆடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரஜத் படிதார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

    தென்ஆப்பிரிக்க அணியில் பேட்ஸ்மேன்கள் கடந்த ஆட்டத்தில் மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். டோனி டி ஜோர்ஜி, பெலுக்வாயோ, கேப்டன் மார்க்கிராம் தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ஆடுகளத் தன்மையை சரியாக கணிக்க தவறியதே தோல்விக்கு காரணம் என்பதை கேப்டன் மார்க்கிராம் ஒப்புக் கொண்டார். அவர்கள் அந்த தவறை திருத்திக் கொண்டு வலுவாக திரும்புவார்கள்.

    கடந்த முறை (2022) தென்ஆப்பிரிக்க தொடரில் லோகேஷ் ராகுல் தலைமையில் முழுமையாக (0-3) தோல்வியை தழுவிய இந்திய அணி இந்த முறை அதற்கு பரிகாரம் தேடும் வகையில் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வரிந்து கட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டுவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் அதிக ஸ்கோரை எதிர்பார்க்க முடியாது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ரஜத்துக்கு மாற்று வீரரை தற்போது அறிவிக்க வேண்டாம் என பயிற்சியாளர்களும் நிர்வாகமும் முடிவு செய்துள்ளனர்.
    • ஆர்சிபி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    பெங்களூரு:

    16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை கோப்பயை வெல்ல ஆர்சிபி அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பல்வேறு கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரஜத் படிதார் விலகுகிறார் என ஆர்சிபி அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    டுவிட்டர் பதிவில்,

    துரதிருஷ்டவசமாக, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023-ல் இருந்து ரஜத் படிதார் வெளியேறுகிறார். ரஜத் விரைவில் குணமடைய விரும்புகிறோம். மேலும் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். ரஜத்துக்கு மாற்று வீரரை தற்போது அறிவிக்க வேண்டாம் என பயிற்சியாளர்களும் நிர்வாகமும் முடிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

    ஆர்சிபி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×