search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருதுக்கு விண்ணப்பிக்கலாம்"

    • ஆண்டுக்கான விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடக்கும்.
    • உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு குறித்து பரிசீலனை செய்யப்படும்.

    ஈரோடு, 

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு "முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது" ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரூ.50 ஆயிரத்துடன் பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

    இதற்கு 1-4-2023 அன்று 15 வயது நிரம்பியவர்களும், 31-3-2023 அன்று 35 வயதுக்குள் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராகவும், சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியவராகவும் இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரி, பள்ளிகளில் பணியாற்றுபவர்களாக இருக்கக்கூடாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு குறித்து பரிசீலனை செய்யப்படும்.

    இந்த விருதுக்கு www.sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

    ×