search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தேபாரத் ரெயில்"

    • வந்தேபாரத் ரெயில் டிரைவர் எமர்ஜென்சி பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார்.
    • ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த டிரைவரையும் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் அதிவேகமாக இயக்கப்படும் வந்தேபாரத் ரெயில்கள் தற்போது பல மாநிலங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு பகுதிக்கு இயக்கப்படும் வந்தேபாரத் ரெயில், நேற்று மதியம் பையனூர் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், கட்டுமான வேலைக்கு பயன்படுத்தப்பட்ட லாரி தண்டவாளத்தின் குறுக்கே வந்துள்ளது.

    இதனை கவனித்த வந்தேபாரத் ரெயில் டிரைவர் எமர்ஜென்சி பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த டிரைவரையும் கைது செய்தனர்.

    • பிரதமர் மோடி 31ந்தேதி காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
    • சென்னை சென்ட்ரலில் தொடக்க விழா நடைபெற உள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையேயும் மதுரை-பெங்களூர் இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 31ந்தேதி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார். சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த வந்தேபாரத் ரெயில் சேவை தொடக்க விழா நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், இந்த இரண்டு ரெயில்கள் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரெயில் நிலையங்கள் விவரம் உள்பட பல்வேறு தகவல்களை ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

    சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே வந்தேபாரத் ரெயில் சேவை (20627-20678) வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்தரெயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அதேநாள் மதி யம் 1.50 மணிக்கு அடையும்.

    மறுமார்க்கமாக, இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், விழுப்பு ரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.

    மதுரை-பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை (20671-20672) வாரத்தில் செவ் வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த ரெயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப் பட்டு, அதே நாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும்.

    மறுமார்க்கமாக, இந்த ரெயில் பெங்களூரு கண் டோன்மெண்ட்-ல் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும்.

    இந்தரெயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

    இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்துக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • திருப்பூருக்கு 7.25 மணிக்கு வந்த ரெயில் இனி 7.18 மணிக்கும் வந்து செல்லும்.

    திருப்பூர்

    சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சேலத்துக்கு மாலை 5.58 மணிக்கு வந்த ரெயில் இனி 5.48 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.47 மணிக்கு வந்த ரெயில் இனி 6.37 மணிக்கும், திருப்பூருக்கு 7.25 மணிக்கு வந்த ரெயில் இனி 7.18 மணிக்கும் வந்து செல்லும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • குமரி மாவட்ட மக்கள்,தலைநகர் சென்னைக்கு செல்ல கூடுதலாக ஒரு ரெயில் சேவை கிடைக்கும்

    மார்த்தாண்டம் :

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் துணைத் தலை வர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயி ரக்க ணக்கான மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு செல்கின்ற னர். அவர்களுக்கு வசதி யாக கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூர், உள்ளிட்ட சில ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் கூட, பயணிகள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையே உள்ளது.

    அதிலும் குருவாயூர், அனந்தபுரி ரெயில்கள் கேரளாவில் இருந்து இயக்கப்படுவதால் அங்கேயே முன்பதிவு இரு க்கைகள் அதிக அளவில் நிரம்பி விடுவதும் தொடர் கதையாகி வருகின்றது.

    குமரி மாவட்டம் படித்த வர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் என்பதால் பலரும் சென்னையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறை யும் சொந்த ஊர் வந்து, சென்னை திரும்ப ரெயிலில் டிக்கெட் கிடை ப்பதே பெரும் சிரமமாக உள்ளது.

    இதனால் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரெயிலை தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதே குமரி மக்களின் கோரி க்கையாகும்.

    அப்படி செய்வதன் மூலம் குமரி மாவட்ட மக்கள்,தலைநகர் சென்னைக்கு செல்ல கூடுதலாக ஒரு ரெயில் சேவை கிடைக்கும். குமரி மக்களின் சிரமமும் பெரும் அளவில் தீர்க்கப்படும்.

    தற்போது நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையால், நெல்லையில் இருந்து சென்னைக்கான பயண நேரம் 12 மணி நேரத்திலிருந்து 7 மணி நேரம் 50 நிமிடங்களாக குறைந்து ள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே கன்னியாகுமரி மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையை தமிழகத்தின் தென் கடைக்கோடி மாவட்ட மான கன்னியா குமரி வரை நீட்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில்வே சார்பில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் நாட்டின் 26-வது ரெயிலாக இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
    • வி.ஐ.பி. பெட்டிகளுக்கு ரூ.2,800 வரையிலும், சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1,300 வரையிலும் கட்டணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நெல்லை:

    ரெயில் பயணிகளுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் துரிதமான சேவைகளை வழங்கும் விதமாக இந்திய ரெயில்வே சார்பில் நாள்தோறும் புதிய நவீன ரெயில்கள் அறிமு கப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சுமார் 25 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ள நிலையில் தமிழகத்திலும் இந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 22-ந்தேதி முதல் முதலாக தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சென்னை-மைசூரு இடையே இயக்கப்பட்டது.

    தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி சென்னை-கோவை இடையே 2-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று பலத்த கோரிக்கை எழுந்த நிலையில், ரெயில்வே சார்பில் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் நாட்டின் 26-வது ரெயிலாக இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயிலை இந்த மாதத்தில் இருந்து ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பிட்லைன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக இருக்கும். இந்த ரெயிலில் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு வேளை உணவு வழங்கப்படும். இந்த ரெயிலில் தானியங்கி கதவுகள், தீத்தடுப்பு அலாரம், கண்காணிப்பு கேமிராக்கள், அகலமான ஜன்னல் கண்ணாடிகள், பயணிகளின் உடைமைகளை வைக்க ரேக்குகள் வசதி, சென்சாரில் இயங்கும் நீர் குழாய்கள் உள்ளிட்ட நவீன ஏற்பாடுகள் இருக்கும்.

    மேலும் ரெயிலில் பயணிப்பவர்களுக்கு இலவச வைபை வசதி, ஜி.பி.எஸ். அடிப்படையில் இயங்கும் பயணிகள் தகவல் மையம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மெட்ரோ ரெயில்களை போல, பயணிகளின் பாதுகாப்பிற்காக ரெயில் நின்ற பிறகே கதவுகள் திறக்கும். ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவான எல்.எச்.பி. பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டு உள்ள தாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    இந்த ரெயிலில் வி.ஐ.பி. பெட்டிகளில் சுழலும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கும். சாதாரண பெட்டிகளில் சாயும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை-சென்னை இடையே உள்ள 658 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரெயில் 8 மணி நேரத்தில் அடையும் வகையில் இயக்கப்பட உள்ளதால் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்த ரெயில் வருகிற 6-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சுதந்திர தினத்தன்று தமிழக மக்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு சுதந்திர தின பரிசாக பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சந்திப்பு ரெயில்வே மேலாளர் முருகேசன் கூறியதாவது:-

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 3 பிட் லைன்கள் உள்ளன. இதில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளில் முழுமையாக பராமரிப்பு பணி மேற்கொள்ள மின்சார வசதி தேவை என்பதால் முதல் 2 பிட்லைன்களை தவிர்த்து, 3-வது பிட்லைனில் மட்டும் அதற்கேற்ப மின்மயமாக்கல் பணிகள் தொடங்கி முடிவடைந்துவிட்டது. மேலும் பெட்டிகளில் பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வதற்கு தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப எந்திரங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகள் தயார் படுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும்.

    தொடக்கத்தில் பயணிகள் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தெரியாததால் 8 பெட்டிகளை மட்டுமே கொண்டு இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இயக்கப்பட்டால், அந்த ரெயிலில் 2 வி.ஐ.பி. பெட்டிகளும், 16 சாதாரண பயணிகள் பெட்டிகளும் பொருத்தப்பட்டு இருக்கும். இதில் சுமார் 1,100 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும்.

    வி.ஐ.பி. பெட்டிகளுக்கு ரூ.2,800 வரையிலும், சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1,300 வரையிலும் கட்டணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் 8 மணி நேரத்தில் சென்னை செல்லவேண்டி இருப்பதாலும், இதே ரெயில்தான் சென்னைக்கு சென்றுவிட்டு, மறுமார்க்கமாக நெல்லைக்கு வரவேண்டும் என்பதாலும் மதுரை, திருச்சி ஆகிய ரெயில்நிலையங்களில் மட்டுமே இந்த ரெயில் நின்று செல்லும். இதுதவிர திண்டுக்கல் அல்லது விருதுநகரில் கூடுதலாக ஒரு நிறுத்தம் ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    வந்தே பாரத் ரெயில் இந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடுக்க விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது.
    • முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கக் கூடிய "வந்தே பாரத்" அதிநவீன சொகுசு ரெயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். நிறுவனம் தயாரிக்கிறது.

    இதுவரையில் இயக்கப்பட்டுள்ள 25 வந்தே பாரத் ரெயில்களும் இங்கு தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

    வந்தே பாரத் ரெயில் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

    முன்பதிவு செய்யும் பயணிகள் மட்டும் பயன்பெறக்கூடிய வகையில் பெட்டிகளை தயாரித்து வருகிறது

    இந்நிலையில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் சாதாரண வந்தே பாரத் ரெயிலை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    அதற்கான டிசைனை வடிவமைக்கிறது. இந்த ரெயிலுக்கு "வந்தே பாரத் சாதாரன்" அல்லது "வந்தே அந்தியோதயா" என்று பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. ஏ.சி. வசதி இல்லாமல் என்னென்ன பிற வசதிகளை இப்பெட்டியில் செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

    வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது. இந்த ரெயிலில் 8 பெட்டிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யவும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12-ம், ரெயிலின் இறுதியில் 2 பக்கமும் என்ஜினும் நிறுவக்கூடிய வகையில் விரைவில் டிசைனை உருவாக்கி தயாரிக்க முடிவு செய்துள்ளது.

    இந்த ரெயில் வந்தே பாரத் ரெயில் நிறுத்தக்கூடிய பிளாட்பாரத்தில் நிற்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. ரெயில் பெட்டிக்குள் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து தருவதோடு உள் அலங்காரமும் இடம் பெறுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் முன்பதிவு இல்லாத வந்தே பாரத் ரெயில் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
    • இந்த ரெயில் ஒடிசாவின் பூரியில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா வரை செல்லும்.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா வரை செல்லும்

    மேலும், 8,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    அப்போது பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஹவுரா மற்றும் பூரி இடையே மத, கலாச்சார மற்றும் ஆன்மீக இணைப்பை மேலும் வலுப்படுத்தும். தற்போது நாட்டில் 15 வந்தே பாரத் ரெயில்கள் செயல்பட்டு வருகின்றன. அவை இணைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துகின்றன என தெரிவித்தார்.

    • ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
    • ரெயில் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம் வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் சேவை தொடங்கப்பட்ட சிறிது நாட்களிலேயே அடுத்தடுத்து 2 முறை வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் சம்பவம் நடந்தது.

    நாளை மறுதினம் தெலுங்கானா ஆந்திரா இடையே செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி வரை 2-வது வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரே ஒரு வந்தே பாரத் ரெயில் சேவை மட்டுமே தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆந்திரா தெலுங்கானா இடையே 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு சென்ற வந்தே பாரத் ரெயில் மீது தண்டவாளம் அருகே பதுங்கி இருந்த மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ரெயில் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தே பாரத் ரெயில் மீது 3-வது முறையாக கல் வீசி தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×