என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அனில் அந்தோனி"
- அனிலின் முடிவு மிகவும் தவறானது என ஏ.கே. அந்தோணி தெரிவித்தார்.
- பா.ஜ.க.வில் சேர்வது என்ற அனிலின் முடிவு என்னை புண்படுத்தி விட்டது என்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போது, மத்திய பாதுகாப்பு துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஏ.கே. அந்தோணி. இவரது மகன் அனில் கே. அந்தோணி.
சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. சேனல் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி குறித்து பி.பி.சி. சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோணி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகிய அனில் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் மற்றும் வி.முரளீதரன் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
இந்நிலையில், அனில் அந்தோணி பா.ஜ.க.வில் சேர்ந்தது பற்றி முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோனி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பா.ஜ.க.வில் சேர்வது என்ற அனிலின் முடிவு என்னை புண்படுத்தியுள்ளது. அது ஒரு மிக தவறான முடிவு. ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் இந்தியாவின் அடித்தளம் ஆகும். 2014-ம் ஆண்டுக்கு பின்னர், மோடி அரசு அதிகாரத்திற்கு வந்ததும், பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை திட்டமிட்ட முறையில் நீர்த்துப்போக செய்து வருகின்றனர்.
பா.ஜ.க. சீரான தன்மையில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளது. பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் கருத்து. அவர்கள் நாட்டின் அரசியல் சாசன மதிப்புகளை அழித்துக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
- ஏ.கே.அந்தோனி முன்னாள் ராணுவ அமைச்சராக பதவி வகித்தவர்.
- ஏ.கே.அந்தோனி மகன் அனில் அந்தோனி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
புதுடெல்லி:
மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஏ.கே.அந்தோனி. இவர் முன்னாள் ராணுவ மந்திரியாக பதவி வகித்தவர்.
சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. சேனல் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி குறித்து பி.பி.சி. சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோணி கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் மற்றும் வி.முரளீதரன் முன்னிலையில் அனில் அந்தோனி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.