search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள் கடத்தல்"

    • இப்பகுதியில் உள்ள நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி செங்கல் சூளைக்காக லாரிகளில் சில மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.
    • அரசு அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தும் அதிகாரிகள் வெள்ளக்கரடு பகுதிக்கு ஆய்வுக்கு வராமலேயே பட்டா நிலத்தில் தான் மரங்கள் வெட்டப்படுகிறது என்று கூறுகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா மாங்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மஞ்சநாயக்கனஅள்ளி கிராமம், வெள்ளக்கரடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

    இந்த புறம்போக்கு நிலத்தில் வேம்பு, துருஞ்சி, பாலை வகையைச் சேர்ந்த மரங்கள் வளர்ந்து வனப்பகுதி போல் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் உள்ள நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி செங்கல் சூளைக்காக லாரிகளில் சில மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.

    இதேபோல் நேற்று வெள்ளக்கரடு பகுதியில் உள்ள துருஞ்சி, வேம்பு, பாலை உள்ளிட்ட மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் வெள்ளக்கரடு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் மர்ம நபர்கள் சிலர் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி லாரிகளில் கடத்தி வருகின்றனர்.

    இதே போல் நேற்றும் வெள்ளக்கரடு பகுதியில் 5 லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி லாரியில் ஏற்றும் போது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தும் அதிகாரிகள் வெள்ளக்கரடு பகுதிக்கு ஆய்வுக்கு வராமலேயே பட்டா நிலத்தில் தான் மரங்கள் வெட்டப்படுகிறது என்று கூறுகின்றனர்.

    எனவே மரங்களை வெட்டி கடத்தி வரும் மர்ம நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் குற்றச்சாட்டு
    • சாலை விரிவாக்கம் பணி நடக்கிறது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பகுதிகளில் சாலை விரிவாக்கம் பணியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றன.

    வேலூர் முதல் ஒடுகத்தூர் வரை சலையின் இருபுறமும் புளிய மரங்கள் உள்ளன.

    பசுமையாகவும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் குளிர்ச்சி யாகவும் காற்றோட்டம் நிறைந்ததா கவும் காட்சியளிக்கின்றன புளிய மரங்கள் சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகின்றது.

    தற்போது சாலை விரிவாக்கம் பணியல் ஒரு சில மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.

    ஆனால் கூடுதலாக மரங்களை வெட்டி வருவ தாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அதிகமான மரங்கள் வெட்டி கடத்தப்படு வதாகவும், பசுமை நிறைந்து காணப்படும் சாலை தற்போது வெயில் மட்டுமே சுட்டெரிக்கின்றது.

    இதனைத் தொடர்ந்து ஒடுகத்தூரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வேப்பமரங்கள், புங்க மரங்கள் என 5-க்கும் மேற்ப்பட்ட மரங்களை எவ்வித அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளன.

    அனுமதி வழங்கிய மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும் மேலும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்ட வே்டாம்.

    பள்ளிகளில் வளர்க்கப்படும் மரங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற மரங்களாக கருதி அவற்றை அளிக்க வேண்டாம் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மரங்கள் வெட்டி கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இதுபற்றி மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேடிவந்த செல்வம்(வயது62), விவசாயியான இவருக்கு உப்போடைப்பட்டியில் மாந்தோப்பு உள்ளது. இவர் அங்கு விலை உயர்ந்த மரம், செடி, கொடிகளை வளர்த்து வருகிறார்.

    இந்தநிலையில் தேடிவந்த செல்வம் சம்பவத்தன்று மதியம் மகன் விவேக்குடன் உப்போடைப்பட்டி மாந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு 5பேர் கும்பல், அவரது தோப்பில் உள்ள மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தது. அதனை விவேக் தட்டிக்கேட்டார். அதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் சரமாரியாக அவரை தாக்கினர். இதில் விவேக் படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றி மேலவளவு போலீசில் தேடிவந்த செல்வம் புகார் செய்தார். அந்த மனுவில், எனக்கும் அ.வல்லாளப்பட்டியை சேர்ந்த ராஜபிரபு, இளவரசன், சவுந்தரவேல், மகேந்திரன், கடத்திநேந்தல், கணபதிநகர் சேது ஆகிய 5 பேருக்கும் இடையில் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் அவர்கள் எனது தோட்டத்துக்குள் அத்துமீறி புகுந்து, ரூ.20லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி லாரியில் கடத்திச்சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் மேலவளவு போலீசார், புகார் கூறப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் சேது என்பவர் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×