search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்"

    • காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் குர்மித்சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
    • பதவி ஏற்றவுடன் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சிவக்குமாருக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கி அவரது பதவியை 6 மாதம் நீட்டிப்பு செய்தார்.

    சின்னாளபட்டி:

    காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பதிவாளராக இருந்தவர் சிவக்குமார். இவரது பதவிக்காலம் கடந்த 9.12.2022ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மத்திய தணிக்கைக்குழு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது பிசியோதெரப்பீஸ்ட்டு படித்த தகுதியில்லாத நபரை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக எவ்வாறு நியமனம் செய்தீர்கள் என கேட்டு அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இதனிடையே பொறுப்பு பதிவாளராக ரங்கநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் குர்மித்சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

    அவர் பதவி ஏற்றவுடன் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சிவக்குமாருக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கி அவரது பதவியை 6 மாதம் நீட்டிப்பு செய்தார். அப்போதும் பல்கலைக்கழக பேராசிரியர்களிடையே மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது.

    இந்நிலையில் பதிவாளர் சிவக்குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆனால் மீண்டும் அவருக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்கி துணைவேந்தர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தலைவர் ராஜாபிரான்மலை தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைகழகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பதிவாளர் பணிநியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இதற்கு உத்தரவு வழங்கிய துணைவேந்தருக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    ×