search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கொள்ளை"

    • மதுபாட்டில் வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மார்க் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொன்னேரி பகுதியில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக துரைசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் மதுபாட்டில் வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மார்க் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்தபோது டாஸ்மாக் கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்துள்ளது.

    அதை பார்த்தவர்கள் இது குறித்து டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த துரைசாமி இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பார்த்தபோது கடைக்குள் வைத்திருந்த ரூ. 43 ஆயிரம் பணம் மற்றும் மது பாட்டில்கள் எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடையில் பணம் மற்றும் மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையில் இருந்த பால்துரை, பாலமுருகன் ஆகியோரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே வன்னிகோனேந்தலில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் சூப்பர் வைசராக தேவர்குளத்தை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளார்.

    நேற்று இரவு அவர் சீக்கிரமாகவே வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கடை ஊழியர்களான வடக்கு பனவடலி சத்திரத்தை சேர்ந்த பால்துரை (வயது 40), வன்னிகோனேந்தலை சேர்ந்த பாலமுருகன்(57) ஆகியோர் கடையில் விற்பனையை பார்த்து கொண்டிருந்தனர்.

    இந்நி லையில் இரவு சுமார் 9.45 மணியளவில் கடைக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அவர்கள் கடையில் இருந்த பால்துரை, பாலமுருகன் ஆகியோரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் கடை ஊழியர்கள் 2 பேரையும் வெட்டியது. உடனே 2 பேரும் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிடவே, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இதுகுறித்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன், கையில் வெட்டுபட்ட பால்துரை ஆகியோரை போலீசார் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த கடை கழுகுமலை சாலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. அதில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து வெட்டியது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கும்பல் டாஸ்மாக் கடையில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக கடை ஊழியர்களை கொலை செய்ய வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • டாஸ்மாக் காவலாளி அய்யாக்குட்டி பணியில் இருந்தபோது அங்கு ஒரு மினி லோடு ஆட்டோவில் 4 பேர் கும்பல் வந்தனர்.
    • மேற்பார்வையாளர் ராமர் ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடக்கன்குளத்தில் இருந்து பெத்தரெங்கபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதன் மேற்பார்வையாளராக களக்காட்டை சேர்ந்த ராமர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    வழக்கம்போல் நேற்று இரவு விற்பனையை முடித்துவிட்டு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கைப்பையில் எடுத்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் டாஸ்மாக் காவலாளி அய்யாக்குட்டி பணியில் இருந்தபோது அங்கு ஒரு மினி லோடு ஆட்டோவில் 4 பேர் கும்பல் வந்தனர்.

    அவர்கள் காவலாளியை மிரட்டி அமரச்செய்துவிட்டு, கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்தனர். பின்னர் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் விலை உயர்ந்த மது பாட்டில்களை அந்த கும்பல் லோடு ஆட்டோவில் ஏற்றி சென்று விட்டனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களையும் அந்த கும்பல் உடைத்தனர்.

    இதுகுறித்து மேற்பார்வையாளர் ராமர் ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்று காலை போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து, அங்கிருந்த சுமார் 450 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை அடுத்த ராஜபுதூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 47). இவர் தெற்கு வள்ளியூரில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக்கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துவிட்டு காவலாளியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வீடு திரும்பினார். நள்ளிரவில் மதுக்கடைக்கு வந்த மர்ம கும்பல் அங்கு பணியில் இருந்த காவலாளியை சரமாரியாக தாக்கினர். பின்னர் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து, அங்கிருந்த சுமார் 450 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து ராமகிருஷ்ணன் பணகுடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ×