search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10-ம் வகுப்பு பொதுத் தேர்வு"

    • பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது.
    • சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    மேலும் ஒவ்வொரு மாவட்டம் பெற்றுள்ள தேர்ச்சி சதவீதம் வருமாறு:-

    கன்னியாகுமரி-95.99

    தூத்துக்குடி-95.58

    அரியலூர்-95.40

    ஈரோடு-94.53

    திருச்சி-94.28

    திருநெல்வேலி-94.19

    தென்காசி-94.12

    திருப்பூர்-93.93

    ராமநாதபுரம்-93.86

    கோவை-93.49

    திருப்பத்தூர்-93.27

    நாமக்கல்-92.98

    புதுக்கோட்டை-92.31

    தஞ்சாவூர்-92.16

    மதுரை-91.79

    திண்டுக்கல்-91.77

    கரூர்-91.49

    வேலூர்-91.34

    சேலம்-91.13

    புதுச்சேரி-91.05

    திருவாரூர்-90.79

    விழுப்புரம்-90.57

    காஞ்சிபுரம்-90.28

    தேனி-90.26

    தர்மபுரி-89.46

    கள்ளக்குறிச்சி-89.34

    சென்னை-89.14

    திருவண்ணாமலை-88.95

    ஊட்டி-88.82

    திருவள்ளூர்-88.80

    கடலூர்-88.49

    செங்கல்பட்டு-88.27

    மயிலாடுதுறை-86.31

    கிருஷ்ணகிரி-85.36

    நாகப்பட்டினம்-84.41

    ராணிப்பேட்டை-83.54

    காரைக்கால்-79.43

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை 30-வது இடத்தை பிடித்து பின்தங்கி உள்ளது.

    • நடப்புக் கல்வி ஆண்டிற்கான (2022-2023) 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
    • இத்தேர்வு மையங்களில் 22,599 மாணவர்கள், 21,965 மாணவிகள் என மொத்தம் 44,564 தேர்வர்கள் பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

    சேலம்:

    நடப்புக் கல்வி ஆண்டிற்கான (2022-2023) 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 189 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 179 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காக வும், 10 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மையங்களில் 22,599 மாணவர்கள், 21,965 மாணவிகள் என மொத்தம் 44,564 தேர்வர்கள் பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

    தடையில்லா மின்சாரம்

    இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 28 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 37 வழித்தட அலுவலர்கள், 189 முதன்மை கண்காணிப் பாளர்கள், 189 துறை அலுவலர்கள், 3430 அறை கண்காணிப் பாளர்கள், 210 ஆசிரிய ரல்லா பணியாளர்கள் மற்றும் தேர்வுமையங்களை கண்காணிக்கும் பொருட்டு முதுகளை, பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் 250 ஆசிரியர்கள் பறக்கும் படைக்குழுக்களாகவும் என பல்வேறு நிலைகளிலும் தேர்வு பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்க ளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சமூக அறிவியல் தேர்வு

    5-வது நாளான இன்று அறிவியல் பாட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விைன மாணவ- மாணவிகள் உற்சாகமாக எழுதினர். தொடர்ந்து வருகின்ற 20-ந்தேதியுடன் (வியாழக்கிழமை) 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைகிறது. கடைசி நாளான அன்று சமூக அறிவியல் பாட தேர்வு நடக்கிறது.

    இந்த பாடத்தை படிக்கும் வகையில் மாணவ- மாணவிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (19-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் விடுமுைற விடப்பட்டுள்ளது.

    முழுவாண்டு விடுமுறை

    வருகிற 20-ந்தேதி மதியம் 1.15 மணி அளவில் தேர்வு முடிவடைந்ததும், மாணவ- மாணவிகளுக்கு முழுவாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது.

    ×