search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவலிங்க சிலை"

    • பாம்பு கோவிலில் இருந்த சிவலிங்க சிலையை சுற்றியபடி இருந்தது.
    • தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டை மேட்டு தெருவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது வழிபாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது.

    இந்தநிலையில் கோவிலுக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. உடனே அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பாம்பு கோவிலில் இருந்த சிவலிங்க சிலையை சுற்றியபடி இருந்தது. இதனால் பக்தி பரவசமடைந்த பக்தர்கள் உடனே பால் ஊற்றி வழிபட்டனர். சிறிது நேரத்திற்கு பின் பாம்பு அங்குள்ள மரத்தடிக்குள் சென்று மறைந்தது.

    இதையடுத்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சென்று மறைந்திருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் வனப்பகுதியில் விட்டனர்.

    பாம்பு லிங்கத்தை சுற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபட்ட பக்தர்கள்
    • சுமார் 50 அடி தூரம் கடல் “திடீர்” என்று உள் வாங்கி காணப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களில் கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நிறம் மாறுவது, அலையே இல்லாமல் குளம்போல் காட்சியளிப்பது போன்ற இயற்கை மாற்றங்கள் திகழ்ந்து வருகின்றன. அந்த அடிப்படையில் நாளை சர்வ மகாளய அமாவாசை என்பதால் கன்னியாகுமரி கடலில் நேற்று மாலையில் இருந்து கடலில் "திடீர்"என்று மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரம் கடல் "திடீர்" என்று உள் வாங்கி காணப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதில் பாறையில் இருந்த சுமார் 2 அடி உயரம் உள்ள சிவலிங்க சிலையும் வெளியே தெரிந்தது. இந்த செய்தி அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது.

    இதைத்தொடர்ந்து அந்த சிவலிங்க சிலையை பார்க்க கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கடலுக்குள் மூழ்கி இருந்த சிவலிங்க சிலைவெளியே தெரிந்ததை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதைப்பார்த்த பக்தர்கள் நேற்று பிரதோஷம் என்பதால் அந்த சிவலிங்க சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினார்கள். அந்த சிவலிங்க சிலைக்கு நல்லெண்ணெய், அரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, களபம், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, புனித நீர் மற்றும் கடல் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடத்தினார்கள்.

    அதன் பிறகு அந்த சிவலிங்க சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தி அலங்கார தீபாரதனை காட்டினார்கள். அப்போது கடற்கரையில் திரண்டிருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த சிவலிங்க சிலையை வணங்கிவழிபட்டனர். சிலர் கடலில்இருந்தஅந்த சிவலிங்க சிலையை தங்களது செல்போன்களில் படம் பிடித்து சென்றனர்

    ×