search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பெண் யானைகள்"

    • கண்காணிப்பு கேமிராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
    • 2 பெண் யானைகள் குதூகலமாக விளையாடி கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை அந்த பகுதியில் கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்ப ட்டிருந்த கரும்பு, வாழை, மக்காச்சோளம், ராகி, முட்டைக்கோஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றது.

    இதனை அடுத்து கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என தாளவாடி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே மூன்று முறை கும்கி யானைகள் வரவழை க்கப்பட்டு கருப்பனை பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. கிட்டத்தட்ட 6 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை வனத்துறை யினரிடம் இருந்து தப்பித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    இதனைத் தொடர்ந்து 4 -வது முறையாக கருப்பன் யானையைப் பிடிக்க மாரியப்பன், சின்னத்தம்பி என 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து வனத்துறை யினர் யானை வரும் வழித்தடத்தை கண்டறிந்து அங்கு சென்றனர். தாள வாடி அடுத்த மகாராஜன் புரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கரும்பு தோட்டத்தி ற்கு கருப்பன் யானை வந்தது.

    அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவி னர் கருப்பன் யானை மீது மயக்க ஊசி செலுத்தி னர். சிறிது நேரத்தில் மயங்கி யபடி நின்ற கருப்பன் யானையை உடனடியாக வனத்துறையில் கும்கி யானை மாரியப்பன் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு கருப்பன் யானையை லாரியில் ஏற்றினர்.

    இதையடுத்து தமிழக -கர்நாடகா எல்லை பகுதியான அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தட்டகரை வனப் பகுதியில் கருப்பன் யானையை வனத்துறையி னர் கொண்டு போய் விட்டனர்.

    இதை தொடர்ந்து கருப்பன் யானை நடமா ட்டத்தை கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் தட்ட கரை வனப்பகுதியில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அடர்ந்த வனப் பகுதியை விட்டு கருப்பன்யானை வெளியேறாமல் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தட்ட கரை பயணியர் விடுதியில் 2 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பர்கூர் தட்டக்கரை வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமி ராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

    அப்போது தட்டக்கரை கிழக்கு பகுதியில் 7-வது கிலோமீட்டர் தொலைவில் தானியங்கி கேமிராவில் 2 பெண் யானைகள் குதூக லமாக விளையாடி கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

    மேலும் கருப்பன் யானை மற்ற யானைகளுடன் கூட்டாக சேர்ந்து சண்டையிட்டு கொள்ளாமல் செல்கின்ற னவா மேலும் மயக்கம் தெளிந்த நிலையில் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் மருத்துவ குழுவினர் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து பார்த்து வருகின்றார்கள்.

    ×