search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 318018"

    • ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.
    • ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.

    இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வள்ளம் மற்றும் நாட்டு படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்களின் விலை"கிடுகிடு" வென கடுமையாக உயர்ந்து உள்ளது.

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆரோக்கியபுரம், கோவளம், கன்னியாகுமரி, வாவத்துறை, கீழ மணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நாட்டுப்படகு மற்றும் வள்ளங்களில் பிடித்து வரப்பட்ட மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

    கன்னியாகுமரி வாவத்துறை மீன் இறங்கு தளத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்கள் வாங்குவதற்காக குவிந்து இருந்தனர். மீன் வரத்து குறைவு காரணமாக இன்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    ரூ. 700 ஆக இருந்த ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1000-க்கும், ரூ.250 விலைபோன பாரை மீன் கிலோ ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்ற விள மீன் கிலோ ரூ.400-க்கும், ரூ.250க்கு விற்ற ஊலா மீன் கிலோ ரூ.350-க்கும், ரூ.250 ஆக இருந்த சங்கரா மீன் கிலோ ரூ.350-க்கும் விற்பனையானது.

    விசைப்படகுகள் மீன்பிடிதடை காலம் என்பதால் இன்னும் ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    • மீன்பிடி வலைகளையும் மீனவர்கள் தயார்படுத்துகிறார்கள்
    • விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் கால மாகும். இந்த காலங் களில் விசைப்படகு கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வரு கிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போ தும் பரபரப்பாக காணப் படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த மீன்பிடி தடை காலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த மீன்பிடி தடை காலம் முடிவடைய இன்னும் 1 ½ மாதமே உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். மீனவர்கள் தங்களது பழுதடைந்த விசைப்படகுகளை சின்ன முட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் கரையேற்றி படகுகளின் உடைந்த பகு தியை சீரமைப்பது, பச்சை நிற வர்ணம் தீட்டுவது, பழுதான எந்திரங்களை சீரமைப்பது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த தடைக்காலங்களில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்கள் இந்த தடைகாலம் என்று முடியுமோ என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ×