search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 318093"

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை நாளை மாநிலம் முழுவதும் தொடங்கவுள்ளது. இதற்காக மாணவர்களின் விடைத்தாள்கள் ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை 625 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 44,831 மாணவர்கள் நடப்பாண்டு 10-ம் வகுப்பு தேர்வெழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிக்காக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் கல்வி மாவட்டத்தில், சூரமங்கலம் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆத்தூர் தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சங்ககிரி கல்வி மாவட்டத்தில் ஜலகண்டாபுரம் மினர்வா பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிக்காக முகாம் அலுவலர்கள் தலை மையில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர், முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர், இதர பணியாளர்கள் என சுமார் 2,400-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை 24-ந் தேதி முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர் பணி களை தொடங்கி வைத்து, 25-ந் தேதி முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணியின்போது, தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள நேர விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி என்பது மிகவும் பொறுப்பான பணி. ஆனால் பல நேரங்களில் உரிய நேர விதிகள் கடைபிடிக்கப்படு வதில்லை. ஒரு சிலர் அவசர, அவசரமாக ஒதுக்கிய நேரத்திற்கு முன்னதாகவே மதிப்பீடு செய்துவிடுகின்றனர்.

    இதனை பார்த்து மற்றவர்கள் பதற்றமடைந்து விரைவாக திருத்த வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால், துல்லியத்தன்மை இல்லா ததுடன், குளறுபடிகளும் நடப்பதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கடந்த முறை விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்கு றைவுடன் இருந்ததாக ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த மையமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, விடைத்தாளை பொறுமையாக மதிப்பீடு செய்யும் வகையில், உரிய நேர விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

    ×