search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தும் பணி"

    • வருகிற 30-ந்தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
    • பணிகளில சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். அதன்படி தமிழ், வேதியியல், இயற்பியல் உள்பட பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) நிறைவு பெற உள்ளது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதையடுத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி வருகிற 6-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.

    இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-

    பொதுத்தேர்வு நிறைவடைந்ததும் வருகிற 30-ந்தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து மதிப்பீட்டு மையங்ளுக்கு 4-ந்தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.

    தொடர்ந்து ஏப்ரல் 6-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடை பெற உள்ளன. முதலில் அரியர் மாணவர்களுக்கான விடைத்தாள்கள் 6-ந்தேதி முதல் 13-ந்தேதிக்குள் மதிப்பீடு செய்யப்படும்.

    தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மேற்கொள்ளப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14-ந்தேதி வெளியிடப்படும். மதிப்பீட்டு பணிகளின் பொது ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 மையங்களில் தொடங்கியது
    • திருத்தும் பணி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியிலும், சேக்ரட் கார்ட் மெட்ரிக் பள்ளியிலும் நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 10,508 மாணவர்களும், 11,572 மாணவிகளும் என மொத்தம் 22,080 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து முடிந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து பிளஸ்-1 மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் 11,805 மாணவர்களும், 11,587 மாணவிகளும் என மொத்தம் 23,392 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியிலும், படந்தாலுமூடு சேக்ரட் கார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுதேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11,827 பேரும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 11,497 பேர் என மொத்தம் 23,324 பேர் தேர்வு எழுதினார்கள். இவர் களுக்கான விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விடைத் தாள்கள் திருத்தும் பணி இன்று காலை தொடங்கியது. தேர்வு கட்டுப்பாட்டை அதிகாரிகள் முன்னிலையில் விடைத்தாள்கள் வைக்கப் பட்டிருந்த அறையின் சீல்கள் உடைக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

    நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத் தாத்தள்கள் நாகர்கோவில் கார்மல் பள்ளியிலும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்துக்கான விடைத் தாள்கள் உண்ணா மலைகடை மெட்ரிக் பள்ளியிலும் திருத்தப்பட்டு வருகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஒரு வார காலத்திற்குள் விடைத் தாள்கள் திருத்தி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×