search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண்மை கூட்டுறவு வங்கி"

    • விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை பலமுறை கேட்டும் வழங்காத காரணத்தால் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் டெபாசிட் செய்துள்ள பணம் சுமார் 3 கோடிக்கு கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக கூறி விவசாயிகள் போலீஸ் நிலையம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்கும் திட்டம், அடமான கடன் மற்றும் விவசாயிகள் இருப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சுமார் 3 கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக அதிகாரி களிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் தங்களது கால்நடைகளுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது;- விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகளின் பயிர் கடன், அடமான கடன், இருப்புத் தொகை, வாடிக்கையாளர்களின் டெபாசிட் ஆகியவற்றில் அ.தி.மு.க வை சேர்ந்த தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க செயலாளர் கீதா ஆகியோர் பல கோடி குறைகேட்டில் ஈடுபட்டு ள்ளனர். விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை பலமுறை கேட்டும் வழங்காத காரணத்தால் இன்று காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றார்.

    இதற்கு இடையே சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகிருஷ்ணன், துணை பதிவாளர் கதிரவன் விவசாயிகளின் பணம் கிடைக்க உரிய வழிவகை செய்யப்படும் என கூறியதின் பேரில் விவசாயி கள் போராட்டத்தை தற்காலி கமாக கைவிட்டனர். காத்திருப்பு போராட்டத்தில் கருப்புசாமி, லோகு உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் அடமானமாக வைத்த நகை மற்றும் சொத்து ஆவணங்கள் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது.
    • சரியான நேரத்தில் அலாரம் ஒலித்ததால் கூட்டுறவு வங்கியில் இருந்த பலலட்சம் மதிப்பு உள்ள அடமான நகை, மற்றும் ஆவணங்கள் தப்பியது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகைகடன் வழங்கப்படும்.

    விவசாயிகள் அடமானமாக வைத்த நகை மற்றும் சொத்து ஆவணங்கள் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்மநபர்கள் 2 பேர் கூட்டுறவு வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் நகை உள்ள அறையின் கதவை உடைக்க முயன்றனர்.

    இதனால் அங்கிருந்த அலாரம் ஒலித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதற்கிடையே மர்ம நபர்கள் லாக்கரை உடைக்க முயற்சி செய்ததும் அதில் பொருத்தப்பட்ட கருவி மூலம் கூட்டுறவு வங்கி தலைவர் சத்குருவின் செல்போனிற்கும் குறுந்தகவல் வந்தது. இதுபற்றி அவர் கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் கூட்டுறவு வங்கிக்கு விரைந்து வந்தனர்.

    இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சரியான நேரத்தில் அலாரம் ஒலித்ததால் கூட்டுறவு வங்கியில் இருந்த பலலட்சம் மதிப்பு உள்ள அடமான நகை, மற்றும் ஆவணங்கள் தப்பியது. அலாரம் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்ததும் கொள்ளையர்கள் இரும்பு கம்பிகள், கதவை உடைக்க கொண்டு வந்து இருந்து எந்திரங்களை அங்கேயே போட்டு விட்டு சென்று இருந்தனர். அதனை போலீசார் கைப்பற்றினர்.

    வங்கியில் உள்ள கண்காணிப்பு காமராவில் கொள்யைர்கள் 2 பேரின் உருவம் பதிவாகி உள்ளது. கொள்ளையர்கள் புகுந்ததும் முதலில் கண்காணிப்பு கேமிரா வயர்களை துண்டித்து இருந்தனர். கேமராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

    வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×