என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அவதி அடையும் மக்கள்"
- ஈரோட்டில் மட்டுமே 106 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது.
- இப்போ தே 106 டிகிரி வெயில் கொளுத்தும் நிலை யில், எதிர் வரும் கத்திரி வெயிலை எதிர்கொள்வது எப்படி என மக்கள் கடும் அச்சத்து க்குள்ளாகியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் தொடர்ந்து 100 டிகிரி வெயில் கொளு த்துவதால் பொது மக்கள் கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயி லின் தாக்கம் தொட ர்ந்து 100 டிகிரிக்கு அதிக மாகவே பதிவாகி வருகிறது.
ஈரோட்டில் மட்டுமே 106 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது.
காலை 7 மணிக்கெல்லாம் வீசத் தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 7 மணி வரை நீடித்து வருகிறது. குறிப்பாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்கும் மேலாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.
மதிய நேரத்தில், நகரின் பிரதான சாலைகள் வெறி ச்சோடியே காணப்படு கின்றன. வீடுகள், அலுவ லகங்களில் மின்விசிறி இய ங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் காரணமாக அனல்காற்றே வீசுகிறது.
இதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதிலிருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் குளிர்பானங்களை பருகி வருகின்றனர்.
கரும்பு பால், மோர், இளநீர், தர்பூசணி, முலா ம்பழம், வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான பொருட்களின் வியாபாரம் விறுவிறுப்படைந்துள்ளது.
ஈரோட்டில் கடந்த 4 நாள்களாக தொடர்ந்து 104 டிகிரிக்கு மேலாகவே வெயில் பதிவாகி வந்த நிலையில், நேற்று 106 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
ஏப்ரல் மாதம் தொடங்கி யது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கவுள்ளது.
இப்போ தே 106 டிகிரி வெயில் கொளுத்தும் நிலை யில், எதிர் வரும் கத்திரி வெயி லை எதிர்கொள்வது எப்படி என மக்கள் கடும் அச்சத்து க்கு ள்ளாகியு ள்ளனர்.