search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம பஞ்சாயத்துக்கள்"

    • நகராட்சி கமிஷனர் ஜெயப்பிரியா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • உரிமம் பெற்ற கழிவுநீர் அகற்றும் வாகனம் மட்டுமே மேற்கண்ட பணியில் பயன்படுத்தப்பட வேண்டும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி ஆணையாளா் அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் ஜெயப்பிரியா தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி முன்னிலையில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 16 கிராம பஞ்சாயத்துகளான புளியரை, இலத்தூர், சீவநல்லூர், கற்குடி, தெற்குமேடு, கணக்குபிள்ளைவலசை, காசிமேஜர்புரம், குத்துக்கல்வலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், சுமைதீர்த்தபுரம், தேன்பொத்தை, வல்லம், கொடிகுறிச்சி, நெடுவயல், காசிதர்மம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்கான கசடு கழிவு மேலாண்மை திட்டத்தில் இணைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    உரிமம் பெற்ற கழிவுநீர் அகற்றும் வாகனம் மட்டுமே மேற்கண்ட பணியில் பயன்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட உரிமம் பெற்ற கழிவுநீர் வாகன ஓட்டுநர்களின் தொலைபேசி எண் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தங்களது கிராம பஞ்சாயத்துகளில் மேற்கண்ட உரிமம் பெற்ற கழிவுநீர் அகற்றும் வாகனங்களையே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    ×