search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மௌன அஞ்சலி"

    • களிமேடு கிராமத்தில் சப்பர பவனியின் போது தீ விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
    • களிமேடு தீ விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற 94 வது அப்பர் குருபூஜை விழாவில் நடைபெற்ற சப்பர பவனியின் போது எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த கம்பியில் சப்பரம் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு விவசாயி சுவாமிநாதன் , முன்னாள் ராணுவ வீரர் பிரதாப் , கோயில் பூசாரி ஆத்தா செல்வம்,  சிறுவன் ராஜ்குமார், சிறு வன் பரணிதரன், விவசாயி அன்ப ழகன், ராகவன்,   நாகராஜன்,  மோகன், சந்தோஷ், கோவிந்தராஜ்  உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர்.

    தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சோக சம்பவத்தின் வடு இன்னமும் அந்த ஊர் மக்களின் மனதில் இருந்து ஆறாத நிலையில் அதில் பலியானோருக்கு தஞ்சாவூர் நகர பொதுமக்கள் சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்ற தஞ்சை ரயிலடியில் நடைபெற்றது.

    தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நகர பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்துகொண்டு களிமேடு தீ விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

    அலங்கரித்து வைக்கப்ப ட்டிருந்த பலியானோர் புகைப்படங்களுக்கு மலர் தூவி அவர்களது ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    ×