search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி"

    • மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேச்சு
    • உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது

    குடியாத்தம்:

    குடியாத்தம் காந்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் என்ற தன்னார்வ அமைப்பு இணைந்து விழுதுகளை வேர்களாக்க என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடத்தியது.

    இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மக்கள் மறுமலர்ச்சி தடம் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் வாழ்த்துரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் விஜயகுமார், மன்னர்மன்னன் ஆகியோர் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் தாசில்தார்கள் விஜயகுமார், முரளிதரன் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் குடியாத்தம் தனி வட்டாட்சியர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    முன்னதாக உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு கல்விக்காக அதிக முக்கியத்துவம் தந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது ஒரு நாடு முன்னேற கல்வி மருத்துவம், தொழில் துறை முன்னேற்றம் இருக்க வேண்டும். அதுபோல் தமிழ்நாடு அரசு மக்கள் நலஅரசு இந்த 3 துறைகளிலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    மாணவர்கள் கல்வி கற்க வறுமை தடை இல்லை மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகள் உள்ளன.

    அவர்கள் உயர் கல்வி படிக்க பல்வேறு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்திக் கொண்டு வருகிறது. மாணவர்கள் அந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு என்னென்ன படிப்புகள் உள்ளன அந்த படிப்புகளை படித்த பின் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    மாணவர்கள் நன்றாக படித்து நுழைவுத்தேர்வு எழுதி போட்டியான இந்த உலகத்தில் வேலை வாய்ப்பு பெற வேண்டும் முதல் முயற்சி தோல்வி அடைந்தாலும் கவலைப்படக்கூடாது மாணவர்கள் தொடர்ந்து போட்டி தேர்வுகளை எழுதிக் கொண்டால் நிச்சயம் வெற்றி நிச்சயம் இவ்வாறு அவர் பேசினார்.

    ×