search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலையர் புனரமைப்பு வாரியம்"

    • முத்தரையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • முத்தரையர் சாதிகளுக்கு என்று தனியாக ‘‘வலையர் புனரமைப்பு வாரியம்’’ அமைக்க வேண்டும்.

    மதுரை

    தமிழ்நாடு முத்தரையர் சங்க மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் குப்புசாமி, மாவட்டச் செயலர் அழகுமணி, பொருளாளர் ராமநாதன், துணைத் தலைவர் நடராஜன், ஆடிட்டர் ஆண்டிசாமி, துணைச் செயலாளர்கள் அழகுமுருகன், பீ.பீ.குளம் பாண்டி, மாநில் பொதுக்குழு உறுப்பினர்கள் குப்பு வெங்கடேசன், குண்டுமலை, அழகர், தமிழ் செல்வன், கருப்பையா, மகாமுனி, உத்தப்புரம் கருப்பையா, மதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பெரும்பிடுகு முத்தரையர் 1348-ம் பிறந்தநாள் விழாவை அடுத்த மாதம் 23-ந் தேதி சிறப்பாக கொண்டாடுவது, சென்னை சிந்தாதிரி பேட்டையில் தலைமை சங்க கட்டிட திறப்பு விழாவிற்கு மதுரை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது, தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு- புள்ளிவிபர சேகரிப்புகளை எடுக்க வேண்டும்.

    இதன் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் முத்தரையர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். முத்தரையர் சங்கத்தின் உட்பிரிவை சேர்ந்த வலையர், செட்டிநாடு வலையர், அம்பலகாரர், சேர்வை ஆகிய 4 சாதிகள் சீர்மரபினர் பட்டியலில் உள்ளன. நாங்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம். எனவே முத்தரையர் சாதிகளுக்கு என்று தனியாக ''வலையர் புனரமைப்பு வாரியம்'' அமைக்க வேண்டும்.

    அதில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 4 பேரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×