என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டேவிட் வில்லி"
- இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
- இங்கிலாந்து 6 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 31 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் உள்ளன. கடைசி இடத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி உள்ளது.
இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. வங்காளதேசம் அணியிடம் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 33 வயதான இவர் இங்கிலாந்து அணிக்காக 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 43 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
- இந்த சீசனில் ஆர்சிபி அணியில் இடம் வகித்த ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி காயம் காரணமாக விலகி உள்ளார்.
- பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
பெங்களூரு:
16வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தொடர் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், குஜராத் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இது வரை 42 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
இதில் குஜராத் அணி முதல் இடத்திலும், லக்னோ, ராஜஸ்தான், சென்னை அணிகள் 2 முதல் 4 இடங்களில் உள்ளன. மிகவும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தொடரை தொடங்கிய பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
அந்த அணியில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த சீசனில் ஆர்சிபி அணியில் இடம் வகித்த ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரராக ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவை அந்த அணி சேர்த்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்