search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்கள் வாக்குவாதம்"

    • அடிப்படை உரிமைகள் கேட்டு வந்தால் பொதுமக்களுக்கு சரியான பதிலும், உரிய மரியாதையும் ஊராட்சி செயலாளர் செலுத்துவதில்லை
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனகூறினார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எத்திலோடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட த்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது கூட்டம் முடிந்ததாக அறிவித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி உள்பட அனைவரும் எத்திலோடு ஊராட்சி மன்ற அலுவலக த்திற்கு சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த ஆவாரம்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் கேள்விக்கு முறையாக எந்த பதிலும் அளிக்கவில்லை எனக்கூறி ஊராட்சி மன்ற அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.

    இதனையறிந்த நிலக்கோட்டை ஆணையாளர் பஞ்சவர்ணம் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அடிப்படை உரிமைகள் கேட்டு வந்தால் பொதுமக்களுக்கு சரியான பதிலும், உரிய மரியாதையும் ஊராட்சி செயலாளர் செலுத்துவதில்லை என இளைஞர்கள் ஆணையாளர் பஞ்சவர்ணத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    ×