search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடை கேமரா"

    • மத்திய ரெயில்வே சார்பில் 50 ஆடை கேமராக்கள் மும்பை ரெயில்வே கோட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • அநாகரிக செயல்களை தடுக்கும் விதமாக, டிக்கெட் பரிசோதகர்களின் ஆடை கேமரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    புது டெல்லி:

    ஆடை கேமராக்கள் முதன்முறையாக பிரிட்டனில் அங்குள்ள போலீசார் ஆடையில் அணிந்து கொள்ளும் வகையில் கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, பல்வேறு நாடுகளில் காவல்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளில் பல்வேறு போலீஸ் படைகளில் ஆடை கேமரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவிலும் பல்வேறு படைகளில் ஆடை கேமரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முதன் முறையாக ரெயில்வேயிலும் ஆடை கேமரா திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் மும்பை மண்டல ரெயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு இந்த ஆடை கேமரா திட்டம் தற்போது நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய ரெயில்வே சார்பில் 50 ஆடை கேமராக்கள் மும்பை ரெயில்வே கோட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய ரெயில்வே மண்டலத்தில் அண்மையில் ரெயிலில் பயணித்த பெண் பயணி ஒருவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற டிக்கெட் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதுபோல, ரெயில்களில் பயணிகள் அநாகரிகமாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    இது போன்ற அநாகரிக செயல்களை தடுக்கும் விதமாக, டிக்கெட் பரிசோதகர்களின் ஆடை கேமரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் பரிசோதனையில் வெளிப்படைத் தன்மையையும் இது உறுதிப்படுத்தும்.

    மும்பையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முன்னோடித் திட்டம் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்யப்படும். அதன் பிறகு சாதக-பாதகங்களை கணக்கில் கொண்டு நாட்டின் மற்ற பகுதிகளிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தலா ரூ. 9 ஆயிரம் விலையுடைய இந்த ஆடை கேமரா, தொடர்ச்சியாக 20 மணி நேரம் பதிவு செய்யும் திறன் கொண்டதாகும்.

    ×