என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தசாவதாரம்"
- நள்ளிரவு முதல் விடிய விடிய நடந்த தசாவதார நிகழ்ச்சியில் கள்ளழகர் மோகினி அவதாரத்தில் காட்சி அளித்தார்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர்.
மதுரை
மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கடந்த 3-ந்தேதி கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார். அப்போது அவர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்த ருளினார்.
மதுரை மூன்றுமாவடியில் 4-ந்தேதி எதிர்சேவை நடந்தது. இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு 5-ம் தேதி அதிகாலை ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.
அதன் பிறகு தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி அதிகாலை 5.52 மணிக்கு ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்கினார்.
அப்போது லட்சக்க ணக்கான பக்தர்கள் வைகை ஆற்றுப்பகுதியில் திரண்டு வந்து அழகரை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு ராமராயர் மண்டபம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி அபிஷேகம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார். அதன் பிறகு நேற்று காலை சேஷ வாகனத்தில் வைகை ஆற்றின் நடுவில் உள்ள தேனூர் மண்ட பத்திற்கு புறப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பின்தொடர்ந்து வந்து தரிசனம் செய்தனர்.
தேனூர் மண்டபத்தில் மதியம் 12.30 மணிக்கு எழுந்தருளிய கள்ளழகர், மாலை 3 மணிக்கு மேல் திருமஞ்சனம் முடிந்து கருட வாகனத்தில் எழுந்த ருளினார். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் தேனூர் மண்டபம் முன்பு, மண்டூக முனிவருக்கு சாப விமோ சனம் அளிக்கும் நிகழ்வு நடந்தது.
அப்போது தவளை வடிவில் இருந்த சுதபஸ் முனிவரை, நாரை கொத்தி தின்று விடாமல் கள்ளழகர் காப்பாற்றி சாபவிமோசனம் அளித்தார். இதற்காக அங்கு உண்மையான நாரை பறக்க விடப்பட்டது. அப்போது தேனூர், வண்டியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
அதன் பிறகு கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் இருந்து வண்டியூர் ஆஞ்ச நேயர் கோயிலுக்கு சென்றார். அப்போது நல்ல மழை பெய்தது. இருந்த போதிலும் கள்ளழகர் அடுத்தடுத்த மண்டகப்படிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களும் மழையில் நனைந்துகொண்டே தரிசனம் செய்தனர்.
ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கள்ளழகர் இரவு 9 மணியளவில் ராமராயர் மண்டபம் சென்றடைந்தார். அங்கு நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று காலை வரை விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. கூர்ம, கிருஷ்ண, மச்ச, மோகினி, முத்தங்கி, ராமர், வாமண அவதா ரங்களில் கள்ளழகர் எழுந்த ருளினார்.
இதனை ஆயிரக்க ணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் உலா வந்தார். கள்ளழகர் இன்று மதியம் 2 மணி அளவில் புறப்பாடாகி, ஆழ்வார்புரம் செல்கிறார். அங்கு உள்ள சடாரி மண்டபத்தில் எழுந்து அருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். அதன் பிறகு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் தங்குகிறார்.
நாளை அதிகாலை 2 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி, கருப்பணசாமி கோயில் முன்பு வையாழியாக உருமாறி அழகர் மலைக்கு புறப்படும் நிகழ்வு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 9-ந்தேதி அழகர் கோயிலை சென்றடைகிறார். அங்கு மறுநாள் (10-ந்தேதி) உற்சவ சாத்துப்படிகளுடன் சித்திரை திருவிழா முடிவடைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்