search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிசாராயம்"

    • 175 கேன்களில் இருந்த மொத்த 6105 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போபாலில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து விற்பது தெரிந்தது.

    செங்கல்பட்டு:

    மதுராந்தகம் அருகே உள்ள அய்யனார் கோவில் சந்திப்பில் கடந்த மாதம் எரிசாராயம் கடத்தி வந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 175 கேன்க ளில் இருந்த மொத்த 6105 லிட்டர் எரிசா ராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக லாரி டிரைவரான மேகவண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில் எரிசாராயம் கடத்தல் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி என மிகப்பெரிய அளவில் நடைபெறுவது தெரிந்தது.

    மேகவண்ணன் கொடுத்த தகவலின்படி பட்டாபிராமை சேர்ந்த கிஷோர், சைதாப்பேட்டையை சேர்ந்த தனசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போபாலில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து விற்பது தெரிந்தது. இதையடுத்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை போலீசார் போபால் விரைந்து சென்று எரி சாராயம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட குர்மீட்சிங் சாசன் என்பவரை பிடித்தனர்.

    போபாலில் இருந்து ஐதராபாத் வழியாக எரிசாராயத்தை கொண்டு வந்து தமிழகம், கேரளா முழுவதும் சப்ளை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எரிசாராயம் வழக்கில் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த சுரேஷ், செங்கல்பட்டை சேர்ந்த தனசேகரன் உள்பட மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

    எரிசாராயம் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை மொத்தமாக போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள், 2 கார்கள், வேன், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 15 ஆயிரத்து 911 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது. எரிசாராயம் கடத்தல் கும்பலை கூண்டோடு பிடித்த தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    • போலீசார் , சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதிலிருந்து ஒரு நபர் தப்பி ஓட முயன்றார்.
    • போலீசார் அவரை மடக்கி பிடித்து காரை சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து சாராயம் கடத்தப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.     அதையடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னக் கமணன் தலைமையான போலீசார் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்தற்ககிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதிலிருந்து நபர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 300 லிட்டர் விஷ எரிச்சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திண்டிவனம் கலால் துறையிடம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து திண்டிவனம் கலால் துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து புதுவை மாநிலத்தை சேர்ந்த கவிநீலவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது சம்பந்தமாக கலால் டி.எஸ்.பி. பழனி விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் கவிநீலவனிடம் இருந்த 300 சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 8 லட்சம் மதிப்பிலான கார் பறிமுதல் செய்ய ப்பட்டது. கலைநீலவன் புதுவையில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து தமிழகப் பகுதியில் விற்பனை செய்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ×