search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொற்கால ஆட்சி"

    • தி.மு.க. ஆட்சி என்பது தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சி.
    • பரமக்குடியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

     பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம பரமக்குடி காந்தி சிலை முன்பு தெற்கு நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவரும், தெற்கு தி.மு.க. நகர செயலாளருமான சேது கருணாநிதி வரவேற்றார்.

    இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே கொரோனா தொற்றில் இருந்து நாட்டையும், மக்க ளையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா வில் இருந்து மக்களை பாதுகாத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் மக்களுக்கு அட்டவணையாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாதவைகளையும் மக்களுக்காக செய்து வருகிறோம்.

    குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.3 லட்சம் கோடியில் புதிய தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. அதன் மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அரசியல் சட்டத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருப் பவர்கள் கவர்னர் மாளி கைக்கு தன்னை வைத்துக் கொண்டு திராவிட மாடல் காலாவதி ஆகிவிட்டது என கவர்னர் கூறுகிறார். அப்படி என்றால் நாங்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்களும் காலாவதி ஆகிவிட்டதா?.

    தி.மு.க. ஆட்சி என்பது தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியாகும். எத்தனையோ திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் வடக்கு நகர செயலாளர் ஜீவரத்தினம், வக்கீல் பூமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் குணசேகரன், ஜெயக்குமார், சக்தி, வக்கீல் கதிரவன், கிருஷ்ணமூர்த்தி, வாசு தேவன், அண்ணாமலை, போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×