என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கால்நடைகள் விற்பனை அமோகம்"
- புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுகிறது.
- மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.
இந்த சந்தையில் கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், கோவை மற்றும் புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.
இந்நிலையில் புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்களில் கூடிய மாட்டு சந்தையில் ஜெர்சி இன மாடுகள் ரூ.52 ஆயிரம், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரம், எருமைகள் ரூ.15 முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானது.
இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரம் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் 12 ஆயிரம் வரை விற்பனையானது. எடைக்கேற்ப வெள்ளாடு ரூ.15 ஆயிரம் மற்றும் செம்மறியாடு ரூ.12 ஆயிரம் வரை விற்றது.
இதில் மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- மாட்டுசந்தையில் ஜெர்சி மாடு , சிந்து மாடு , எருமைகள் விற்பனையானது.
- மொத்தம் கால்நடைகள் ரூ. 75 லட்சத்திற்கு விற்பனை ஆனது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.
இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர், சேலம் மற்றும் புளியம்பட்டி சுற்று பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.
இந்த வாரம் கூடிய மாட்டுசந்தையில் ஜெர்சி மாடு 20 ஆயிரம், சிந்து மாடு 15 ஆயிரம், எருமைகள் 16 முதல் 33 ஆயிரம் வரை விற்பனையானது.
இதில் நாட்டுமாடுகள் 45 ஆயிரம் மற்றும் வளர்ப்பு கன்றுகள் 5 ஆயிரம் வரை விற்பனையானது. வெள்ளாடு 7 ஆயிரம், மற்றும் செம்மறியாடு 6 ஆயிரம் வரை விற்பனையானது.
இதில் மொத்தம் கால்நடைகள் ரூ. 75 லட்சத்திற்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்