search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலு தூக்கும் போட்டி"

    • போட்டியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
    • 74 கிலோ எடை பிரிவில் சுதர்சன் தங்கப்பதக்கம் வென்றார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு பவர் லிப்டிங் கழகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி கோவையில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆலங்குளத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுதர்சன் என்ற கல்லூரி மாணவன் 74 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு 125 கிலோ தூக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். எளிமையான குடும்பத்தை சேர்ந்த இந்த மாணவன் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

    மேலும் தற்போது ஆலங்குளம் தினசரி காய்கனி சந்தை மார்க்கெட்டில் இரவு நேரத்தில் வேலை பார்த்து கொண்டு வீரவநல்லூர் தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பு படித்து வருகிறார். இவர் கொரோனா காலகட்டத்தில் இருந்து கடந்த 2 ஆண்டு காலமாக தினசரி காய்கனி சந்தையில் வேலை செய்து கொண்டு பயிற்சி பெற்று குறுகிய காலகட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஆலங்குளம் காய்கனி சந்தை மார்க்கெட் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    • கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • போட்டியில் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    தென்காசி:

    இந்திய வலு தூக்கும் சங்கம் மற்றும் தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுக்கான தேசிய வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

    மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வலு தூக்கும் சங்க மாநில தலைவர் ராஜா எம்.எல்.ஏ., மாநில செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் 24 மாநிலங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியானது வருகிற 17-ந்தேதி வரை நடைபெறும். நேற்று 53, 59 கிலோ உடல் எடை பிரிவில் நடைபெற்ற போட்டியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பரிசுகளை வென்றனர். ஏற்பாடுகளை தேசிய வலுதூக்கும் சங்க செயலாளர் ஜோசப், தேசிய வலுதூக்கும் சங்க தலைவர் சதீஷ்குமார், நெல்லை மாவட்ட தலைவர் சிவராமலிங்கம், செயலாளர் சண்முகசுந்தரம், தென்காசி மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முருகன், ரவிக்குமார், குத்தாலிங்கம் சரவணகுமார், ஜோதிமாணிக்கம், ஹிரா அப்துல் ரசாக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    ×