என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கைதிகள் படுகாயம்"
- கோர்ட்டு வளாகத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டனர்.
- துப்பாக்கி சூட்டில் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் இருவரும் காயமடைந்தனர்
ஜான்பூர்:
உத்தரபிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் ஆகிய இருவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ஜான்பூரில் உள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அப்போது கோர்ட்டு வளாகத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டனர். இதில் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை கோர்ட்டு வளாகத்தில் நின்றிருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் உத்தரவிட்டுள்ளார்.