என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பண மதிப்பிழப்பு நடவடிக்கை"
- 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு திடீரென அறிவித்தது.
- அத்துடன் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது.
புதுடெல்லி:
கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி திடீரென அறிவித்தது. அத்துடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது.
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. பிரதமர் மோடியின் தவறான கொள்கைகளால் தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக கடைப்பிடித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில், ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2016-ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளின் முன் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர்.
அதுபோன்ற ஒரு சூழ்நிலையை மத்திய அரசு தற்போது உருவாக்கியுள்ளது.