search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி மாற்றம்"

    • மனைவி மாற்றும் குழு பற்றி போலீசில் புகார் கொடுத்த பெண், கணவரை பிரிந்து கோட்டயம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
    • போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார்.

    அந்த புகாரில், தனது கணவர், சமூக வலைதளத்தில் உள்ள ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளார். அந்த குழுவில் உள்ளவர்கள் அடிக்கடி குடும்பத்துடன் சந்தித்து கொள்வார்கள். அப்போது குழுவில் உள்ள ஒருவரின் மனைவியுடன் இன்னொருவர் உறவு கொள்வார்கள். அவர்கள் தங்கள் மனைவியரை மாற்றி செக்ஸ் உறவு வைத்து கொள்கிறார்கள்.

    இந்த குழுவினர் சந்தித்து கொள்ளும்போது என்னையும் கணவர் அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்களுடன் என்னையும் உறவு கொள்ளும்படி வற்புறுத்துகிறார். இது எனக்கு பிடிக்கவில்லை எனக்கூறிய பின்னரும் என்னை கட்டாயப்படுத்துகிறார். இதனால் நான் சிலருடன் கட்டாய உறவில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே எனக்கு தொல்லை தரும் இந்த குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகாரில் கூறியிருந்தார்.

    இதுகுறித்து கோட்டயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கேரளாவில் சிலர் இதுபோன்ற குழுக்களை தொடங்கி செக்ஸ் உறவில் ரகசியமாக ஈடுபட்டு வரும் தகவல்கள் கிடைத்தன. அந்த குழுக்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கண்டறிந்தனர்.

    மேலும் இக்குழுவை சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. அப்போது இது கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த குழு பற்றியும், இதில் இணைந்தவர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மனைவி மாற்றும் குழு பற்றி போலீசில் புகார் கொடுத்த பெண், கணவரை பிரிந்து கோட்டயம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். நேற்று அவரது வீடு நீண்ட நேரமாக பூட்டிக்கிடந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு அந்த பெண் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அந்த பெண்ணின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி விசாரித்தனர்.

    இதற்கிடையே அந்த பெண்ணின் உறவினர்களும் அங்கே வந்தனர். அவர்கள், தங்கள் பெண்ணை கொலை செய்தது, அவரது கணவர் தான் என்றும், அவரை உடனே கைது செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் கூறினர்.

    போலீசார், பெண்ணின் கணவரை தேடி அவர் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது கணவர், வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அவர் தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த நபரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் அவர்தான், மனைவியை கொலை செய்தாரா? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    ×